• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ்18 செய்தி எதிரொலி: மயானத்தில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை

நியூஸ்18 செய்தி எதிரொலி: மயானத்தில் பணிபுரியும் ஓவிய ஆசிரியருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை

நியூஸ்18 செய்தி எதிரொலி: மயானத்தில் வேலை பார்த்த ஓவிய ஆசிரியருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை

நியூஸ்18 செய்தி எதிரொலி: மயானத்தில் வேலை பார்த்த ஓவிய ஆசிரியருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை

நியூஸ்18 செய்தி எதிரொலியாக மயானத்தில் வேலை பார்த்த ஒவிய ஆசிரியருக்கு அரசு வேலைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பட்டதாரி இளைஞர் ஒருவர் மயானத்தில் இரவில் பிணம் எரிப்பதுடன் பகலில் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து பல சாதனைகளை படைத்து வருகிறார். தன்னுடைய ஏழ்மையை போக்க அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார்.

    மானாமதுரை கிருஷ்ணாராஜபுரம் காலனியை சேர்ந்தவர்கள் கருத்தகாளை, பஞ்சவர்ணம் தம்பதியர். இவர்கள் இருவரும் மானாமதுரை மயானத்தில் பிணம் எரிக்கும் பணி செய்து தனது வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ள நிலையில் கடைசி மகன் சங்கர்.அவர் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் பெற்றுள்ளார்.

    இவர் மட்டுமே கருத்தகாளை குடும்பத்தில் முதல்பட்டதாரியும் ஆவார். சங்கர் தனது குடும்ப வறுமை காரணமாக சிறுவயது முதலே பள்ளிக்கு செல்வதுடன் மாலை தனது தந்தை தாயிக்கு உதவியாக பிணம் எரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    மேலும் சங்கருக்கு கலை மீது ஆர்வம் அதிகம் காரணமாக ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் அவருக்கு திருமணமானதுடன் வேலை வாய்ப்பும் கிடைக்காததால் தனக்கு தெரிந்த ஓவியத்திறமையை கொண்டு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிக்கு சேர்ந்து தற்சமயம் பணிபுரிந்து வருகிறார்.

    மேலும் அந்த வருமானமும் போதுமானதாக இல்லாததால் இன்றளவும் மயானத்தில் பிணம் எரிக்கும் பணியில் தன்னுடைய தந்தைக்கு துணையாக செல்கிறார். இதனால், தனக்கு அரசு உதவ முன்வந்தால் பேரூதவியாக இருக்கும் என்றும் ஏதேனும் வேலை வாய்ப்பு வழங்கினால் தன்னுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் என கோரிக்கையும் விடுத்திருந்தார். இதனை நியூஸ்18 தொலைக்காட்சி செய்தியாக பதிவு செய்திருந்தது.

    இந்நிலையில், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவுபடி, மானாமதுரை வட்டாச்சியர் தமிழரசன், தலைமை வருவாய் துறை அதிகாரிகள் ஓவிய ஆசிரியர் சங்கர் வீட்டிற்கு சென்று விசாரணை செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

    தொடர்ந்து, சங்கர் கோரிக்கையான அரசு வேலைக்கும் மாவட்ட ஆட்சியர் முலம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: