காரைக்குடி அருகே ஊத்தா முறையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உற்சாகமாக மீன்பிடித்தனர்.
கிராமங்களில் நெல் அறுவடை முடிந்ததும் மீண்டும் அடுத்தாண்டு இதே போல விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி பாரம்பரியமாக கோவில் திருவிழா, ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு ,எருது விடும்விழா இந்த வரிசையில் கிராமங்களில் மீன்பிடி திருவிழாவும் நடப்பது வழக்கம் மீன்பிடி திருவிழாவில் பல்வேறு முறைகள் இருந்தாலும் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் பெரும்பாலான கிராமங்களில் ஊத்தா முறையில் மட்டுமே மீன்பிடிப்பது என்ற நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி அருகே கண்ணடி கண்மாயில் மீன்பிடி திரு விழா கோலாகலமாக நடந்தது. கடந்தாண்டு பெய்த மழை நீரை கண்மாய்களில் தேக்கி விவசாய தேவைக்கு பயன்படுத்திய பிறகு நீர் வற்ற தொடங்கியது இதனால் கண்மாய் பராமரிப்பவர்கள் கிராமத்தின் முக்கிய நபர்கள் சேர்ந்து கண்மாயில் உள்ள மீன்பிடிக்க முடிவு செய்து பாரம்பரிய கையால் முடையப்பட்ட ஊத்தா கூடையால் மட்டும் மீன் பிடிக்க அனுமதி என செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
இதனை அறிந்த பூலாங்குறிச்சி, துவார், ஆத்திரம் பட்டி , வேலங்குடி, செவ்வூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறுவர்கள், இளைஞர் பெரியவர்கள் அதிகாலையில் வருகை தந்து காத்திருந்து மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மஞ்சு விரட்டு திடலில் அவிழ்த்து விட்ட காளையை போல சீறி பாய்ந்து மின்னல் வேகத்தில் ஓடி சென்று கண்மாயில் இறங்கி ஊத்தா கூடை மூலம் மீன்களை பிடித்தனர்.
-செய்தியாளர்: முத்துராமலிங்கம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.