அடுத்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா ?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பளிச் பதில்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாமக்கல் மருத்துவ கல்லூரிமருத்துவமனை  கட்டுமான பணியில் குறைபாடு இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்த கல்லூரியில் கட்டுமான தர அலுவலர்களை வைத்து கட்டுமான தரத்தை பரிசோதிக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காணல் அறக்கட்டளை சார்பில் 50 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார் அவருடன்  காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

  இதன் பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது காணல் அறக்கட்டளை பேரிடர் காலத்திற்கு மிகப்பெரிய தேவைகளில் ஒன்றாக இருக்கிற ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கிற வகையில் திரவ ஆக்சிசன் சேமிப்பு கொள்கலன் தந்திருக்கிறார்கள் .அதனை இன்று திறந்து வைத்து மருத்துவமனை பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைவார்கள்.

  Also read: வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? – ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

  ஒன்றிய அரசு சார்பில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக ரூ 99 கோடி 84 லட்சம் ஒன்றிய அரசுக்கு  தமிழக அரசு செலுத்தி 29 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து  இதுவரை பெற பட்ட தடுப்பூசிகள் 2, 69,91,100 இவற்றில் மக்களுக்கு செலுத்தப்பட்டது 2,61,20,624.

  தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை 2,80,57,397 பேர். தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை இருக்கிறது . கையிருப்பில் இருப்பது 15 லட்சம் மட்டுமே.

  Also read:  94,000 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கிய ஆபத்தான சிறுகோள்!

  24  மணி நேரமும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எல்லா நாட்களிலும்  தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்  படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும்  மக்கள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இன்றைய நிகழ்ச்சியில் அனைவரும் முககவசம் அணிந்திருந்தது மகிழ்ச்சியான விஷயம். கரும்பூஞ்சை நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது . மக்கள் அச்சப்பட தேவையில்லை.

  Also read:  ஆப்கனில் எல்லாம் போச்சு.. இந்தியர்கள் தான் காப்பாத்துனாங்க, ரொம்ப நன்றி – ஆப்கன் பெண் நெகிழ்ச்சி

  நாமக்கல் மருத்துவ கல்லூரிமருத்துவமனை  கட்டுமான பணியில் குறைபாடு இருப்பதாக புகார் வந்துள்ளது. அந்த கல்லூரியில் கட்டுமான தர அலுவலர்களை வைத்து கட்டுமான தரத்தை பரிசோதிக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்த பிறகு  தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடங்கள் நிறைய காலியாக உள்ளது ஏற்கனவே தற்காலிக பணியாளர்களாக உள்ளவர்களை அவர்களின் தகுதிக்கு ஏற்ப நியமனம் செய்து முடித்த பிறகு மீதி இடங்கள் இருந்தால் புதிய பணியாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். அரசு மருத்துவமனைகள் கண்டிப்பாக தரம் உயர்த்தப்படும்  இந்தாண்டு நீட் தேர்வு உறுதி என்ற நிலையில் அடுத்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா ?என்ற கேள்விக்கு அடுத்தாண்டு பார்ப்போம் எனறு  கூறினார் .

  முத்துராமலிங்கம், செய்தியாளர் - காரைக்குடி
  Published by:Arun
  First published: