தனது தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் குத்தி கொலை!

தனது தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் குத்தி கொலை!

தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். சம்பவம் குடிபோதையில் நடந்ததா?கூலிப்படையால் நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Share this:
தனது தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகங்கை அருகே அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் மது அருந்தி கொண்டு இருந்த  10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர். அதற்கு அவர்கள் செவி சாய்க்காமல் தொடர்ந்து அங்கேயே மது அருந்தி வந்துள்ளனர்.

இதையடுத்து, தோட்டத்தில் ஒரு கும்பல் மது அருந்தி வருவதாக ஆடு மேய்பவர்கள் தோட்டத்தின் உரிமையாளர் இருதயராஜூக்கு தகவல் தந்துள்ளனர்.

இருதயராஜூக்கு ஜோசப்சேவியர் (25) கிரிஸ்டோபர் (22) ஆகிய மகன்கள் உள்ளனர். இதையடுத்து, இருதயராஜ் மகன்கள் இருவரையும் அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று கும்பலிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது எற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில்  கிரிஸ்டோபர் (22)  சம்பவ இடத்திலே பலியானார்.

Also read: தேசிய பொறுப்பு; பல்வேறு மொழிகளைக் கற்று பேசி அசத்தும் வானதி சீனிவாசன்!

தொடர்ந்து, அண்ணன் ஜோசப்சேவியருக்கும் கத்திகுத்து விழுந்துள்ளது, தந்தை இருதயராஜூம் முகத்தில் காயத்துடன் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிவகங்கை நகர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தலைமையில் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். சம்பவம் குடிபோதையில் நடந்ததா?கூலிப்படையால் நடந்ததா? அல்லது இடத்தகராறு காரணமா? முன்பகையா? என பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

இருதயராஜின் இரண்டு மகன்களும் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவபடிப்பு  படித்து வருகின்றனர். முதல் மகன் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இறந்த கிறிஸ்டோபர் முதாலம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக  இருவரும் தற்போது ஊரில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: