Home /News /tamil-nadu /

கார்த்தி சிதம்பரம் எம்பி-க்கு எதிராக சிவகங்கை நகர் முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

கார்த்தி சிதம்பரம் எம்பி-க்கு எதிராக சிவகங்கை நகர் முழுதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

Karthik chidambaram

Karthik chidambaram

கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து மருது சேனை இயக்கம் சார்பாக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் முழுவதும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து நகர் முழுவதும் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சித்ம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை கட்சியில் இருந்து அன்மையில் நீக்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும். மேலும் திமுக அரசு அறிவித்து, சிவகங்கைக்கு வரவேண்டிய விவசாய கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்டங்களை தனது சொந்த ஊரான காரைக்குடி பகுதிக்கு கொண்டு செல்கிறார்.

    போஸ்டர்கள் கிழிப்பு


    மாவட்ட தலைநகராக இருந்தும் மொத்தமாக தொடர்ந்து இப்பகுதியை கார்த்தி சிதம்பரம் புறக்கணிப்பு செய்வதாக கூறி மருது சேனை என்கிற அமைப்பினர் சிவகங்கை நகர் முழுவதும் கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    மேலும் ஒரு சில இடங்களில் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் அந்த போஸ்டர்களில் சிலவற்றை கிழித்துள்ளனர்.

    பூவலிங்கம்


    மருது சேனை அமைப்பின் பூவலிங்கம் இது தொடர்பாக கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்காக பல காலம் உழைத்த எங்கள் சமூகத்தினரை சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். சிவகங்கைக்கு வரவேண்டிய கல்லூரிகளையும் வரவிடாமல் செய்கிறார். அவரை கண்டித்து மருது சேனை இயக்கம் சார்பாக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். எங்கள் அமைப்பு 30 மாவட்டங்களில் உள்ளது. சென்னை, மதுரை விமான நிலையங்களில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.

    செய்தியாளர் சிதம்பரம் - சிவகங்கை
    Published by:Arun
    First published:

    Tags: Karti Chidambaram, Sivagangai

    அடுத்த செய்தி