மானாமதுரை சிலம்பம் மாஸ்டருக்கு டாக்டர் பட்டம் - புதுச்சேரி உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கெளரவம்..
மானாமதுரை சிலம்பம் மாஸ்டருக்கு டாக்டர் பட்டம் - புதுச்சேரி உலகத் தமிழ் பல்கலைக்கழகம் கெளரவம்..
சிலம்பம் மாஸ்டர்
Manamadurai Silambam Master Perumal | கெளரவ டாக்டர் பட்டம் பெற்று ஊர்திரும்பிய பெருமாளுக்கு மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியும் பட்டாசு வெடித்தும் வரவேற்பு கொடுத்தனர்.
மானாமதுரையை சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் பெருமாளுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்தவர் சிலம்பாட்ட ஆசிரியர் பெருமாள் இவர் சிவகங்கை ,மானாமதுரை காளையார்கோவில் ,ஆகிய பகுதிகளில் வீர விதை சிலம்பாட்டம் குழு அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாணவர் மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு சிலம்பம் பயிற்சி கற்று கொடுத்து வருகிறார்.
தமிழர்களின் பாரம்பரிய சிலம்பாட்டத்தைக் மாணவர்கள் கற்றுக் தெரிந்து கொள்ள பல ஆண்டுகளாக மாணவர் , மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்தநிலையில் இவரது சேவையை பாராட்டி புதுச்சேரி உலக தமிழ் பல்கலைக்கழகம் சிலம்பகலையை வளர்த்து சமூகசேவை ஆற்றியதற்கு"கெளரவடாக்டர் பட்டத்தை மானாமதுரையைச்சேர்ந்த சிலம்பம் மாஸ்டர் பெருமாளுக்கு உலகதமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர் ராய் பெர்னான்டாஸ் டாக்டர் பட்டத்தை வழங்கி கொளர படுத்தினார். கெளரவ டாக்டர் பட்டம் பெற்று ஊர்திரும்பிய பெருமாளுக்கு மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியும் பட்டாசு வெடித்தும் வரவேற்பு கொடுத்தனர்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்.வி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.