ஊரடங்கு: நள்ளிரவிலும் கடமை தவறாத பெண் காவலர்கள்!

நள்ளிரவில் பணியாற்றிய பெண் காவலர்கள்

மற்றவர்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் விழித்து இருந்து பணி செய்கின்றோம் என்கின்றனர் பெண் காவலர்கள்

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலையத்தில் பணியாற்றும் சரண்யா, பாண்டி செல்வி என்ற இரு பெண் காவலர்கள் ஊராடங்கு நேரமான நள்ளிரவில் கடமை தவறாமல் பணியாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழகம் முழுவதும்  கொரோனாவின் தாக்கம்  கடுமையாக இருந்து கொண்டு இருகின்றது. இதற்கு இடையில்  பொது மக்களை காக்க வேண்டும் என சுறு சுறுப்புடன் மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகின்றனர் காவல்துறையினர் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள்.

  இந்நிலையில் மானாமதுரை தேவர் சிலை பகுதியில் நள்ளிரவில் வெறிச்சோடிய  அந்த பகுதியில் இரு பெண் காவலர்கள் மட்டும் ஆளுக்கு ஒவ்வொரு பக்கமும் நடந்து கொண்டே இருந்தனர்.

  ஊரே அமைதியான நிலையில்  மூன்று பக்கம் விதிமுறைகளை மீறி யாராவது வருகின்றனரா என்றும் அப்படி இரு சக்கரம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யாராவது விதிமுறைகளை மீறி வருகின்றனரா
  அப்படி வந்த நபர்களிடம் எங்கு போகின்றீர்கள் ,எங்கிருந்து வருகின்றிர்கள்,அனுமதி கடிதம்,அல்லது பனியாற்றும் அலுவலக கார்டு உள்ளதா என விசாரிகின்றனர்.

  பின்னர் சரியாக இருந்தால் அனுப்பி விடுகின்றனர். மீண்டும் இருவரும் இரு பக்கம் நடந்தது கொண்டே வேறு யாராவது வருகின்றனரா என்றும் தொடர்ந்து அதிகாலை வரை கடமை தவறமால் பணியாற்றிய வருகின்றனர்.

   

  Read More:  வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த இளம் பெண் மரணம் - அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!

  இது குறித்து அவர்களிடம் கேட்ட போது பொது மக்கள் நிம்மதியுடன் இருப்பதற்கு நாங்கள் பணியாற்றி வருகின்றோம் எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த கொரோனாவை விரட்டி விடாலம் என்றும் அதனால் மற்றவர்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் விழித்து இருந்து பணி செய்கின்றோம் இந்த பணிகளை செய்வதில் நாங்கள் பெருமை படுகின்றோம் என்றனர்.

  Read More:   அமேசானில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு ரெட்மி நோட் 10 கிடைத்த ஆச்சர்யம்!

  சும்மா சேரில் உட்கர்ந்து கொண்டு அல்லது அதிலே துங்கி கொண்டு
  கடமைக்கு பணியற்றமாால் கடமையே முக்கியம் என்று இரு பெண் போலீசாரும் வேலை பார்ப்பது பெருமையான விஷயமே...!

  சிதம்பரம் - மானாமதுரை செய்தியாளர்
  Published by:Arun
  First published: