சிவகங்கையில் அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் காற்றில் பறந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்!

அமைச்சர் பெரியகருப்பன் கலந்த கொண்ட நிகழ்ச்சி

கொரோனா கட்டுப்பாடு விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது போல சிறிய இடத்தில் பயனாளிகள் மற்றும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் என 500க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி கலந்துகொண்டனர்.

  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று  இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் வாழ்வாவாதரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகரன் காலனி தெருவில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 357 பேருக்கு கொரோனா பேரிடர் கால உதவி என 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டது போல சிறிய இடத்தில் பயனாளிகள் மற்றும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் என 500க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி கலந்துகொண்டனர். இதன் காரணமாக அங்கு தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.

மேலும் இதில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசும் போது, தற்போது கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்களை மக்கள் தாங்கிக் கொள்ள தான் வேண்டும். மேலும் தொற்று பரவலை கட்டுப்பட்டுத்த மக்கள் ஒன்று கூடுவதையும் வெளியில் நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆனால் தொற்று பரவலை கட்டுபடுத்த கோரும், அமைச்சர் விழாவில் ஒரே இடத்தில் மக்களை திரட்டி  சமூக இடைவெளி இன்றி அரிசி வழங்கியது அதிகாரிகள், பொது மக்கள் மத்தியில்  அதிருப்தியை ஏற்படுத்தியது.

செய்தியாளர் - முத்துராமலிங்கம்
Published by:Esakki Raja
First published: