Home /News /tamil-nadu /

4-வது முறையாக கணவரை எதிர்த்து நிற்கும் மனைவி - சுயேட்சை வேட்பாளருக்கு கைக்கொடுக்குமா நம்பர் சென்டிமெண்ட்

4-வது முறையாக கணவரை எதிர்த்து நிற்கும் மனைவி - சுயேட்சை வேட்பாளருக்கு கைக்கொடுக்குமா நம்பர் சென்டிமெண்ட்

சுயேட்சை வேட்பாளர்

சுயேட்சை வேட்பாளர்

Local Body Election 2022 | தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வந்ததால் இந்த முறையும் சாந்தி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்காமல் கணவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஒற்றை இழக்க நம்பர் சென்டிமெண்ட்டால் கணவர் தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து கணவரை எதிர்த்து 4-வது முறையாக போட்டியிடும் மனைவி.

    காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தி.மு.க அ.தி.மு.க , பா.ஜ.க , நாம் தமிழர் மற்றும் சுயேச்சை என 212 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சித் தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி உறுப்பினராக தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் மெய்யர், தனது வெற்றிக்கு ஒற்றை இழக்க நம்பர் சென்டிமெண்ட் காரணமாக கருதி வருகிறார்.இதற்காக வேட்பாளர்களின் எண்ணிக்கை இரட்டைப்படையாக வந்தால், ஒருவர் வாபஸ் பெறுவதற்காக தனது மனைவி சாந்தியை தனக்கு எதிராக நிறுத்தி வருகிறார்.

    Also Read: வெள்ளியிலேயே அம்மி முதல் உலக்கை வரை.. வாயடைக்க வைத்த சிவகங்கை திருமண சீர்வரிசை - படங்கள்

    மெய்யர் நின்று வெற்றி பெற்ற கடந்த 3 தேர்தலில் மனைவியை தனக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்து ஒற்றைப்படை வந்ததால் தனது மனைவியை வாபஸ் வாங்க வைக்காமல் தன்னை எதிர்த்து போட்டியிட வைத்தார்.அதேபோல் தற்போது நடக்கும் காரைக்குடி நகராட்சி தேர்தலில் 11 வது வார்டில் போட்டியிடுவதற்கு மெய்யர் மற்றும் மனைவி சாந்தியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    Also Read: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 என்னாச்சு.. உதயநிதியை நோக்கி பாய்ந்த கேள்வி

    வாபஸ் பெற இறுதி நாளில் மொத்த வேட்பாளர்கள் 9 பேர் வந்தது. எனவே போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வந்ததால் இந்த முறையும் சாந்தி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்காமல் கணவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.தற்போது அ.தி.மு.க, காங்கிரஸ், நாம்தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மெய்யர், அவரது மனைவி சாந்தி உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர். இந்த முறை அவரது நம்பர் சென்டிமெண்ட் எடுபடுமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.

    செய்தியாளர்: முத்துராமலிங்கம் (காரைக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, DMK, Karaikudi, Local Body Election 2022, Politics, Sivagangai

    அடுத்த செய்தி