• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொடநாடு என்பது ஒரு மர்மம்; நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாக தான் உள்ளது - கார்த்தி சிதம்பரம் எம்.பி

கொடநாடு என்பது ஒரு மர்மம்; நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாக தான் உள்ளது - கார்த்தி சிதம்பரம் எம்.பி

கார்த்தி சிதம்பரம் எம்.பி

கார்த்தி சிதம்பரம் எம்.பி

நிதியமைச்சர் கூறும் புள்ளிவிவரங்கள் தவறு என நினைத்தால் தகுந்த ஆதாரங்களுடன் புள்ளி விவரங்களை எடுத்துக் கூறாமல் வெள்ளை அறிக்கையை அதிமுக விமர்சிப்பது தவறு என்றார்.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறும் போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது இந்தியாவுக்கு பின் விளைவுகள் மோசமாக இருக்கும். 21 ஆம் நூற்றாண்டிற்கு பொருந்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாலிபான் அமைப்பினர். அவர்கள் கொடூரமானவர்கள் ஐஎஸ்ஐ தான் அவர்களை உருவாக்கியது.

    அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை

    அமெரிக்கா அவர்களுக்கு தீனி போட்டுவளர்த்தது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது போல தாலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானையும் கைப்பற்றலாம் இதனால் இந்தியாவில் உள்ளவர்களிடம் தீவிரவாத தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே இது அபாயகரமான விஷயமாக பார்க்க வேண்டும்.

    Also read: ‘உங்கள் தைரியத்துக்கும், உத்வேகத்திற்கும் சல்யூட்!’ – தாலிபான்களை பாராட்டிய இந்திய முஸ்லிம் அமைப்பு!

    சீனாவுக்கும் தலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது அங்கு செயல்படும் சீன தூதரகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவே ஆப்கானிஸ்தான் விஷயத்தில் இந்தியா சாதுரியமாக கையாள வேண்டும். அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும். இந்தியா ஒரே தேசமாக இந்த விஷயத்தை அரசியல் ரீதியாக பிரித்துப் பார்க்காமல் எதிர்கொள்ள வேண்டும். தாலிபான்களின் வெற்றி இந்தியாவிற்கு அபாயகரமான விஷயமாக நான் கருதுகிறேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

    கொடநாடு ஒரு மர்மம்:

    கொடநாடு என்பது ஒரு மர்மம் அங்கு நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாக தான் உள்ளது விசாரணை மூலமே உண்மை தெரியவரும்.
    வெள்ளை அறிக்கை குறித்து அதிமுக பேசுவது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. நிதியமைச்சர் கூறும் புள்ளிவிவரங்கள் தவறு என நினைத்தால் தகுந்த ஆதாரங்களுடன் புள்ளி விவரங்களை எடுத்துக் கூறாமல் வெள்ளை அறிக்கையை அதிமுக விமர்சிப்பது தவறு என்றார்.

    Also read:  தாலிபான்களை இந்திய சுதந்திர வீரர்களோடு ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு!

    மத்திய நிதியமைச்சர் கூறுவது அனைத்தும் பொய் காங்கிரஸ் கட்சி தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்பதை நேரடியாக விவாதிக்க தயார் ஆதாரங்களுடன் எடுத்துக் கூற நாங்கள் தயாராக உள்ளோம். அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக காப்பீட்டுக் கழகங்கள் தனியார் மயம் ஆவதற்கு மாநிலங்களவையில் எதற்காக ஆதரவு அளித்தது என்பதை இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நேரங்களில் கொலைகள் கொள்கைகள் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவே தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் காலியான இடங்களை நிரப்ப வேண்டும் என்றார் மேலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வரவேற்கிறேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காங்கிரஸ், திமுகவும் பலதடவை தேர்தலை ஒன்றாக சந்தித்துள்ளது நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் மகத்தான வெற்றி பெறுவோம் என்றார்.

    முத்துராமலிங்கம், செய்தியாளர் - காரைக்குடி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: