கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை ஏழு கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்ததில் கீழடியின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு சுற்றி கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தற்போது கடைசியாக கீழடியில் , ஏழாம் கட்ட அகழாய்வுப் நடந்து முடிந்தது, இந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக இருக்கும் மக்கள் எப்பொழுதும் வந்து பார்த்து செல்லலாம் என்று தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தது. ஆனால் இதற்கு முன்பாக அகழ்வாய்வு செய்த இடங்களை விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி அகழாய்வு செய்துவிட்டு பிறகு குழிகளை மூடி விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள் விவசாயிகள் மறுபடியும் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள்.
தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக தமிழக அரசு அறிவித்தது, 7ம் கட்ட அகழாய்வுக்கு நிலத்தை கொடுத்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் நாங்கள் ஏழாம் கட்ட அகழாய்வுப் பிறகு குழியை மூடி தருவதாக கூறி தான் எங்கள் நிலத்தை வாங்கினார்கள். ஆனால் தற்போது அது திறந்தவெளி அருங்காட்சியகமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம்.
Also Read: அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன - துரைமுருகன் கேள்வி.. காரசார விவாதம்
அதிகமான தென்னை மரங்களை வளர்த்து வருகிறோம் அதை நம்பி எங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இதனால் எங்கள் நிலத்தை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிப்பதில் எங்களுக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. மேலும் எட்டாம் கட்ட அகழாய்வுக்கு எங்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு நிலமும் தரப்படாது என்று கீழடி நிலம் கொடுத்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Keeladi, Keezhadi, Sivagangai