'கீழடி அகழ்வைப்பக கட்டுமான பணி மே 30-க்குள் முடிவடையும்' - அமைச்சர் எ.வ.வேலு
'கீழடி அகழ்வைப்பக கட்டுமான பணி மே 30-க்குள் முடிவடையும்' - அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு
Sivaganga District : கீழடியில் கண்டுபிடிக்க பட்ட பல ஆயிரம் பொருட்களை காட்சிப் படுத்துவதற்காக கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 11.03 கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்கும் கட்டுமான பணி நடந்து வருகிறது.
கீழடியில் அகழ்வைப்பகம் பணிகள் மே மாத, இறுதிக்குள் முடியும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி , அகரம் மணலூர் கொந்தகை ஆகிய இடங்களில் 7கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளது. இதில் கண்டுபிடிக்க பட்ட பல ஆயிரம் பொருட்களை காட்சிப் படுத்துவதற்காக கொந்தகை கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 11.03 கோடி செலவில் அகழ் வைப்பகம் அமைக்கும் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது , இந்த அகழ்வைப்பகம் பணிகள் இந்த மாதம் மார்ச் மாதம் இறுதியில் பணிகள் முடிந்து திறக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பணி சுமை கூடிக்கொண்டே சென்றது மே மாதம் 30ஆம் தேதி அகழ் வைப்பகம் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றார்.
இந்த ஆய்வின் போது இவருடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகத்துறை அமைச்சர் மூர்த்தி, மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.