திராவிட மாடல் என்ன என்பதை அறிஞர்கள்தான் விளக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை பொருளாதார வீழ்ச்சி குறித்த கேள்விக்கு இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிப்பதாகவும் அங்கு நடக்கும் ஆட்சி முழுக்க சிங்களர்களின் குடும்ப ஆட்சி என்றும் ஒரே குடும்பத்திடம் முழு அதிகாரமும் உள்ளது.
பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் அவர்கள் இந்தியாவை நோக்கி அகதிகளாக வரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு நிதி உதவி அளித்து அந்த நிதி பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கள மக்களுக்கு மட்டும் சென்றடையாமல் நமது தமிழ் மக்களுக்கும் சென்றடைவதை கண்காணிக்க வேண்டும் என பதிலளித்தார்.
மேலும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு காங்கிரஸ் போராட்டங்களை நடத்தினாலும் அவர்கள் செவி சாய்க்கவில்லை மக்களும் அவர்கள் இந்துதுவாவை ஏற்றுக்கொண்டு அவர்கள் விதிக்கும் வரியை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : ஆளுங்கட்சினர் டாஸ்மாக் விற்பனையில் தினமும் 1% கமிஷன் கேட்கிறார்கள்" - கடை ஊழியர்கள் போராட்டம்
பிரதமரும், நிதியமைச்சரும் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டுதான் இருக்கும் என பேசியதுடன் முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு அதனை வரவேற்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆண்டிற்கு ஒரு முறையல்ல 3 முறை சென்று அங்குள்ள வளர்ச்சி, தொழில், மற்றும் அங்கு வாழும் தமிழர்களை சந்திக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு பயன்படும் என்றும் ஆனால் செல்வி ஜெயலலிதா நடிகராக இருக்கும்போது வெளிநாடு சென்றவர் முதல்வரான பின் ஒருமுறை கூட வெளிநாடு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், ஸ்டாலின் பயணத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை போல் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் பயணம் செய்வதை அவ்வாறு விமர்சனம் செய்தால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள் : ரேசன் அரிசி கடத்தலில் தகராறு.. களியக்காவிளையில் மோதிக்கொண்ட கும்பல் - போலீஸ் விசாரணை
மேலும், பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் குற்றங்கள் குறித்த கேள்விக்கு பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்றும் பெண்களை காம பொருட்களாக ஆண்கள் பார்க்க கூடாது என்றும் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விருப்பத்துடன் தான் தமிழகத்தில் தலைவராக முடியும் என்றும் இளைஞர் ஒருவர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்துள்ளார். என்றும் தெரிவித்தார்.
மேலும் திமுகவின் திராவிட மாடல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், திராவிட மாடல் என்ன என்பதை அறிஞர்கள்தான் விளக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களுடைய அரசாங்கம் அவர்களுடைய செயல்பாட்டை வரவேற்கிறேன். ஆனால் இந்திய அளவிற்கு அவர்கள் ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
செய்தியாளர் : சிதம்பரநாதன்.வி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.