• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு - கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?

காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு - கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?

கார்த்தி சிதம்பரம் எம்.பி

கார்த்தி சிதம்பரம் எம்.பி

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்ட நிலையில் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டு 4 பேருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது

  • Share this:
    காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறுகையில், கட்சி உயிரோட்டமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.

    சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவந்த எம்.பி கார்த்தி சிதம்பரம் தேவகோட்டையில் நடைபெற்ற மோதல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கட்சி உயிரோட்டமாக இருக்கிறது என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாக பேட்டியளித்தார்.

    நேற்று (செப் 25) காலை தேவகோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்ட நிலையில் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டு 4 பேருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து உடனடியாக வெளியேறிய கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

    அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் கட்சி உயிரோட்டமாக இருக்கிறது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துவதாகவும் கட்சி நிர்வாகிகளிடையே பதவி போட்டி இருப்பது இயல்பே அந்த வகையில் கட்சி உயிரோட்டமாக இருப்பதை பலமாக காட்டியுள்ளது இந்த நிகழ்வு என தெரிவித்தார். மேலும் மூத்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் புறக்கணிக்கப்படுவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அகில இந்திய அளவிலேயே காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. என்றும் அன்மையில் பஞ்சாபில் கூட அம்ரீந்தர் சிங் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

    Also Read:   பில்லி சூனியம் எடுப்பதாக கூறி ₹80 லட்சம் ஏமாற்றி சொகுசு பங்களா கட்டிய குடும்பத்தினர்!

    கட்சி என இருக்கும் போது கட்சியினரிடையே பல கருத்துகள் இருப்பது இயல்பு. அனைத்தையும் சமாளித்து செல்வதுதான் காங்கிரஸ் கட்சி என தெரிவித்தார். மேலும் மோடி அரசில் பொருளாதாரம் குறித்த கேள்விக்கு இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனே என்றும் தெரிவித்தார் மேலும் பொருளாதாரம் குறித்து ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம் ஆனால் கேட்கும் இடத்தில் மத்திய அரசு இல்லை என தெரிவித்தார்.

    சிதம்பரம் - செய்தியாளர், மானாமதுரை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: