'பிரசாந்த் கிஷோர் யோசனைகளை காங்கிரஸ் அமல்படுத்தினால் நல்லது' - கார்த்தி சிதம்பரம்
'பிரசாந்த் கிஷோர் யோசனைகளை காங்கிரஸ் அமல்படுத்தினால் நல்லது' - கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் எம்.பி
நான் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்கிறேன். இந்தியாவிற்கு வந்த சாபக்கேடு பாஜக. இந்திய பொருளாதாரத்திற்கு மூன்று அடி கொடுத்து விட்டார்கள் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
பிரசாந்த் கிஷோர் கூறும் யோசனைகளை காங்கிரஸ் கட்சி அமல்படுத்தினால் நல்லது என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மித்ராவயல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் வட்டார அளவிலான சுகாதார திருவிழா நடைபெற்றது. மருத்துவ முகாமை துவக்கி வைத்த சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில், ‘மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படுகிறார்கள். நடுநிலையாக அரசியல் சாசனத்தின் பிரதிநிதியாக ஆளுநர்கள் செயல்படுவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
பிரசாந்த் கிஷோர் இந்தியத் தேர்தல் புள்ளிவிவரங்களை நன்கு அறிந்தவர். அவர் கூறும் யோசனைகள் காங்கிரஸ் கட்சி அமல்படுத்தினால் நல்லதாக அமையும் என்று நான் நம்புகிறேன். நான் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்கிறேன். இந்தியாவிற்கு வந்த சாபக்கேடு பாஜக. இந்திய பொருளாதாரத்திற்கு மூன்று அடி கொடுத்து விட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் 25 இடங்களில் வெற்றி பெற்றால் அண்ணாமலை கூறியது சரிதான் என நினைத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பேசிய அவர், ’பெண்ணிற்கு 21 வயது நிறைவடைந்த பின் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். 23 வயதுக்கு முன் பெண்கள் குழந்தை பெறுவது தாய்க்கும், குழந்தைக்கும் நல்லது இல்லை என்று கூறியவர் உடல், மனோரீதியாகவும் 23 வயதுக்கு பிறகு பெண் குழந்தை பெற்றால் தான் நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே கிராமங்களில் 17 , 18 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்யக் கூடாது. 21 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். மேலும் பெண்ணிற்கு முதல் குழந்தை 23 வயதுக்கு பிறகு தான் பிறக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்தியாளர் : முத்துராமலிங்கம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.