காரைக்குடியில் ஒற்றைப்படை சென்டிமெண்ட் - போட்டியாக மனைவியை நிறுத்தி, 4-வது முறையாக வென்ற சுயேச்சை கவுன்சிலர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஒற்றைப்படை சென்டிமெண்டுக்காக தனக்கு போட்டியாக மனைவியை நிறுத்தி, 4-வது முறையாக சுயேச்சை வேட்பாளர் வென்றுள்ளார்.
காரைக்குடி நகராட்சியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் மெய்யர், தனது வெற்றிக்கு ஒற்றைப்படை சென்டிமெண்டை காரணமாக கருதி வருகிறார். இதற்காக வேட்பாளர்களின் எண்ணிக்கை இரட்டைப்படையாக வந்தால், ஒருவர் வாபஸ் பெறுவதற்காக தனது மனைவி சாந்தியை தனக்கு எதிராக நிறுத்தி வருகிறார்.
ஏற்கனவே 3 முறை நடந்த தேர்தலில் மனைவியை நீக்கினால் தான் ஒற்றைப்படை வந்தது என்பதால் அவரை வாபஸ் வாங்க செய்தார். ஆனால் இந்த முறை தனது மனைவியையும் சேர்த்தால் தான் ஒற்றைப்படை வந்தது. இதனால் தனது மனைவியை வாபஸ் வாங்க வைக்காமல் தன்னை எதிர்த்து போட்டியிட வைத்தார். அதேபோல் இந்த முறையும் மெய்யரின் மனைவியும் சேர்த்தால் தான் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக வருகிறது. இதனால் இந்த முறையும் சாந்தி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்காமல் கணவரை எதிர்த்து போட்டியிட்டார்.
அதிமுக, காங்கிரஸ், நாம்தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 9 பேர் போட்டியிட்ட நிலையில் இந்த முறையும் மெய்யரே 716 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளரை விட 251 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் மேலும் அவரது மனைவி சாந்திக்கு 2 வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .
செண்டிமெண்டுக்காக தனது மனைவியையே, கணவர் போட்டி வேட்பாளராக்கி நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டது அப்பகுதியில் சுவாரஸ்யமாக கருதப்படுகிறது.
முத்துராமலிங்கம் (காரைக்குடி)
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.