Home /News /tamil-nadu /

மகனுக்கு தொல்லை கொடுத்த நபரை கூட்டாளியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய தந்தை

மகனுக்கு தொல்லை கொடுத்த நபரை கூட்டாளியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய தந்தை

காரைக்குடி கொலை வழக்கில் கைதானவர்கள்

காரைக்குடி கொலை வழக்கில் கைதானவர்கள்

மகனிடம் மிரட்டி பணம் வாங்கிவந்த நபரை விசிக நிர்வாகி குத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகனிடம் பணம் கேட்டு மிரட்டி வந்த நபரை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கீழ ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ளார். இவர் தேவகோட்டையில் மாட்டுக்கறி விற்பனை கடை வைத்துள்ளார். இந்த கடையை அவரது மகன் நிஷாந்த் கவனித்து வந்துள்ளார். நிஷாந்த் தேவகோட்டை கடைக்கு சென்று வரும் பொழுது காரைக்குடி அருகே உள்ள ரஸ்தா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர்  நிஷாந்த் இடம் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு மிரட்டி வாங்கி வந்துள்ளார்.

    Also Read:  நடுரோட்டில் வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற கும்பல்.. ஆனேக்கல் பகுதியில் பரபரப்பு

    இதுகுறித்து தனது தந்தை கணேசனிடம் ராஜ்குமார் அடிக்கடி பணம் கேட்டு தன்னிடம் மிரட்டி வாங்குவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வி.சி க நிர்வாகி  கணேசன் மற்றும்  அவரது நண்பர் சுந்தரமாணிக்கம் இருவரும்  ராஜ்குமாரை தேவகோட்டை ரஸ்தா பகுதியில் சந்தித்துள்ளனர். அப்போது ஏன் எனது மகனை மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு வாங்குகிறாய் என்று  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Also Read:  வாட்ச் திருடி மாட்டிக்கொண்ட போலி சப்-இன்ஸ்பெக்டர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

    அப்போது வாக்குவாதம் முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.  தகராறில் கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரை வயிற்றில் குத்தியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார் கணேசன் மற்றும் சுந்தரம்மாணிக்கம் இருவரையும் சோமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்

    செய்தியாளர்: முத்துராமலிங்கம் (காரைக்குடி) 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Death, Murder, Sivagangai

    அடுத்த செய்தி