கீழடி அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்! - போர் வீரனுடையதாக இருக்கலாம் என தகவல்..

கீழடி அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்! - போர் வீரனுடையதாக இருக்கலாம் என தகவல்..

கீழடி 7ம் கட்ட அகழாய்வு

கீழடி அகழ்வாய்வு பணியில் தோண்ட தோண்ட வரலாற்று கலைப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.

  • Share this:
    கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியில் கொந்தகையில்  முதுமக்கள் தாழிகளுள் மனித எலும்புக்கூடுகளுடன் இரும்பினாலான கூர்மையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது. போர் வீரனுடைய முதுமக்கள் தாழியை இருந்து இருக்க வேண்டும் என தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும்  கொந்தகை ஆகிய 4 இடங்களில்  7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது .  ஏழாம் கட்ட அகழாய்வு பணி  கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்   கொந்தகையில் தொல்லியல் துறையினர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கிடைத்தது.

    இதுவரை கொந்தகையில் சுமார் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  கடைசியாக திறந்த முதுமக்கள் தாழியில் அதை திறக்கும்பொழுது மனித எலும்புக்கூடுகள், 30 சென்டி மீட்டர்  நீளமுடைய இரும்பினாலான கூர்மையான வாள், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட கூம்பு வடிவ கிண்ணம், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட வட்ட வடிவ கிண்ணம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும்  4 அடி ஆழம் வரை உள்ளது இதில் கிடைத்துள்ள மனித எழும்புக்கூடுகள் வைத்து, ஆணா, பெண்ணா, குழந்தையா என்பது ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.

    முதுமக்கள் தாழி


     

    தற்போது நடந்து வரும்  7ம் கட்ட அகழாய்வு பணியில்  கீழடி , அகரம் ‌, கொந்தகை பகுதியில் நம் முன்னோர்கள் உழவுக்கு  பயன்படும் கற்கருவி, முன்னோர்கள் ‌ பொழுதுபோக்குக்கு பயன்படுத்திய பகடைக்காய், மண் ஓடுகள் ,பாசிகள் கிடைத்துள்ளன .

    கீழடி அகழ்வாய்வு பணியில் தோண்ட தோண்ட வரலாற்று கலைப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தமிழர்களுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் மேலும் சிறப்பு சேர்த்து கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு.
    சிவகங்கையில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது; ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை - ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

    இது குறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில் கொந்தகையில்  கிடைத்துள்ள முதுமக்கள் தாழி ஒரு போர் வீரனாக இருந்து இருக்க வேண்டும் மேலும் இங்கு இறக்கும் போது அதுனுடன் வாள் வைத்து புதைக்கபட்டு இருக்க வேண்டும். இதனால் அப்போதே போர் புரிந்ததற்கு வாய்ப்பு இருப்பது தெரிய வருவதாக  தெரிகிறது என்றனர். இந்த கிடைத்த எலும்புகள், வாள் முழுமையான  ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்றும்.  தொல்லியல் துறை வல்லுநர்கள் கூறினர்.

    சிதம்பரநாதன் - மானாமதுரை செய்தியாளர்
    Published by:Arun
    First published: