சிவகங்கையில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது; ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை - ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

சிவகங்கையில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது; ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை - ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதில் 10 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் முடிந்துள்ளது. 

 • Share this:
  சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது , அதில் 10 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் முடிந்துள்ளது. 10 கி.லிட்டர் ஆக்ஸிஜன் டாங்க் உள்ளது நல்ல நிலையில் பராமரித்து வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தடுப்பூசிகள் பற்றாக்குறை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

  கொரோனா வைரஸ் தடுப்பு  குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துமனை டீன் ரத்தினவேலு மற்றும் மருத்துவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தி கேட்டு கொண்டார். பின்னர் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அளித்த பேட்டியில்,  கொரானா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருவது அனைவரும்  அறிவோம் இந்த நேரத்தில சிவகங்கை மாவட்டத்தில் தினமும் 53 பாசிட்டிவ் கேஸ் வருவதாகவும் தினமும் 1500 பேருக்கு டெஸ்ட் எடுப்பதாகவும் இன்றைய (ஏப்ரல் 23) நிலையில் 428 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். அறிகுறி இல்லாமல் சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார் . தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும், ஆக்ஸிஜன் சப்ளை இருப்பு 10 கி.லிட்டர் ஆக்ஸிஜன் டாங்க் உள்ளது நல்ல நிலையில் பராமரித்து வருவதால் பற்றாகுறை இல்லை என்று கூறினார்

  மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் கண்காணித்து வருவதாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  கூறினார் . சுமார் 22 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் எற்படுத்தியுள்ளோம். ஒரே தெருவில் , ஒரே வீட்டில் 2 பேர், 3 பேர் பாதிப்பு வருவதால் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அழைக்கிறோம் தினசரி 100 முதல் 120 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அலட்சியம் காட்டாமல் மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்றார் .

  சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதில் 10 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் முடிந்துள்ளது.  9000 தடுப்பூசிகள் ஸ்டாக் உள்ளதாகவும் 2 அல்லது 3 நாளில் மீண்டும் மருந்து வரும் என்றும் தெரிவித்தார். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அறிகுறி இருந்தால் அவசியம் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  தாமதமாக வருவதால் மூச்சுத்திணறல் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறினார். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கண்காணிக்கபடுவதாக கூறினார். போதிய மருத்துவர் இருப்பதாகவும் 270 டாக்டர்கள்   செவிலியர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள் பற்றாக்குறை இல்லை என்றும் கூறினர் போதுமான அளவு இருப்பதாக ஆட்சியர் மதுசூதன் கூறினார்.

  மானாமதுரை செய்தியாளர் சிதம்பரநாதன்
  Published by:Arun
  First published: