முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளக்காதலனுடன் ஓடிப்போன அண்ணி.. வழக்கறிஞர் தம்பதியை வெட்டிய கொழுந்தன் - காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலனுடன் ஓடிப்போன அண்ணி.. வழக்கறிஞர் தம்பதியை வெட்டிய கொழுந்தன் - காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதல் விவகாரம்

கள்ளக்காதல் விவகாரம்

Karaikudi: அண்ணண் மனைவி ராணி ஓடிப்போனது வழக்கறிஞர்கள் தம்பதிக்கு  தெரியுமென்று இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அண்ணன் மனைவி  ஓடிப் போனதற்கு காரனம் என வழக்கறிஞர் தம்பதிக்கு  அறுவாளால் வெட்டு - மூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் குமரகுரு. இவரது மனைவி விஜயஸ்ரீ இருவரும்  வழக்கறிஞராக பணி புரிகின்றனர். எதிர் வீட்டில் வசித்து வருபவர் காசி. அவரது மனைவி  ராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளகாதலனுடன் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுகிறது. ராணியும்  வழக்கறிஞர் விஜயஸ்ரீ-யும்  நட்பாக பழகி வந்துள்ளனர். இதனால் அண்ணண் மனைவி ராணி ஓடிப்போனது வழக்கறிஞர்கள் தம்பதிக்கு  தெரியுமென்று கடந்த சில நாட்களாகவே காசி மற்றும் அவரது தம்பி கணபதி ஆகியோர் அடிக்கடி சண்டையிட்டுள்ளனர்.

Also Read: ஆபாச வீடியோ.. இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்.. விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் நேற்று  இரவு  கணபதி அவரது உறவினரான விக்கி வெங்கடேஷ் ஆகியோர்  வழக்கறிஞர் தம்பதி இருவரையும்  அரிவாளால் வெட்டி உள்ளனர். அப்போது தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த   மாரி என்பவரையும் தலையில்  வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன்  வழக்கறிஞர் தம்பதியை  காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும் தலையில் பலத்த  படுகாயமடைந்த மாரியை காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு அங்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி டிஎஸ்பி  வினோஜி, தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம் (காரைக்குடி)

First published:

Tags: Attempt murder case, Crime News, Illegal affair, Illegal relationship, Karaikudi, Sivagangai