• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹெச். ராஜா காலில் விழுந்து வாழ்த்துப் பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.!

ஹெச். ராஜா காலில் விழுந்து வாழ்த்துப் பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.!

ஹெச். ராஜா காலில் விழுந்து வாழ்த்து பெறும் எம்.எல்.ஏ.

ஹெச். ராஜா காலில் விழுந்து வாழ்த்து பெறும் எம்.எல்.ஏ.

மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள திமுக ஆட்சியை 100 நாட்களுக்கு விமர்சிக்கப் போவதில்லை என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள திமுக ஆட்சியை 100 நாட்களுக்கு விமர்சிக்கப் போவதில்லை என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில்  தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தங்கள் கட்சி தொண்டர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் குறிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.  தங்கள் எதிர்ப்பை  வெளிப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இன்று  பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்டத்தில்  பாஜக சார்பில் அரண்மனை வாசல் முன்பு , ஹெச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா,  கடந்த இரண்டு நாட்களாக மேற்கு வங்கத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் இது இந்திய சரித்திரத்தில் கருப்பு அத்தியாயம் என்றும் விமர்சித்தார்.



    தொடர்ந்து தமிழக நிலவரம் குறித்து பேசிய ஹெச்.ராஜா, ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக ஸ்டாலின் சொல்லியுள்ளதால், மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள  திமுக அரசாங்கத்தை 100 நாட்களுக்கு தான் விமர்சிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபடாமல் இருந்திருந்தால் இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்து இருக்காது  என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.   திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை போக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று அவர் வலியுறுத்தினார்.

    முன்னதாக, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு பெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஹெ.ராஜா காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: