சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பில்லத்தி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வீடு இடிந்ததை அடுத்து மூதாட்டி ஒருவர் கழிப்பறையில் வசித்து வருகிறார்.
மானாமதுரை அருகே காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மல்லல் ஊராட்சிக்குட்பட்ட பில்லத்தி கிராமத்தில் அம்மாக்கண்ணு (வயது 70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். கடந்த 10நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அவரது வீடு 10 நாட்களுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து அவர் வசிக்க வேறு இடம் இல்லாததால் இடிந்து விழுந்த வீட்டின் முன்பாக கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பறையில் பொருட்களை வைத்துக்கொண்டும் அதன் அருகிலேயே சமைத்துக் கொண்டும், கண்மாய் கரையில் கூடாரம் அமைத்து இருந்து வருகிறார்.
இதுகுறித்து மூதாட்டி அம்மாக்கண்ணு கூறுகையில், வீடு இடிந்தது குறித்து வருவாய் துறையினருக்கும்,ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை. மேலும் எனது குடும்பத்தில் என்னை கவனிக்க யாரும் இல்லாததால் தற்போது மழைக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவித்து வருகிறேன்.
மேலும் தற்போது பொருட்களை வைத்துள்ள இந்த தனிநபர் கழிப்பறை கட்டியதற்கு கூட மானிய தொகையான ரூ.12 ஆயிரத்தை இதுவரை அதிகாரிகள் வழங்கவில்லை. முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது குடியிருந்த வீடும் இடிந்து விட்டது.ஆகவே மாவட்ட கலெக்டர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, Sivagangai, Tamil News