மாற்றுத்திறனாளி இல்லங்களுக்குச் சென்று தடுப்பூசி - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

சிவகங்கை

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொரோனா இரண்டாம் அலை கொடூரமாக பாதித்து வருகிறது. தமிழகத்தை பல்வேறு துறைகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கிட பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தும் பணியில் பயணித்து வருகிறார். கொரோனா நோய் பாதித்தவர்களை விரைந்து பாதுகாத்திட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் படி அன்றாடம் பல பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். மக்களைப் பாதுகாக்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செய்துவருகிறது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அவை மேலும் அதிகரித்தால் அதற்கான கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.

இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 1,320 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளது. 2,000 சாதரண படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அதில் 200 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. தட்டுப்பாடு ஏதும் இல்லை. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான அளவு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: