மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம்- அசத்தும் சிவகங்கை மாவட்டத்தின் காஞ்சிரங்கால் ஊராட்சி!

காஞ்சிரங்கால் ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு 2 டன் குப்பைகள் அரைத்து திடக்கழிவு மூலம் மேலாண்மைத் திட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிரங்கால் ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு 2 டன் குப்பைகள் அரைத்து திடக்கழிவு மூலம் மேலாண்மைத் திட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் வளமாக்கப்படும் கழிவுகளை பயன்படுத்தி பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூர்பன் திட்டத்தில் ரூ .65 லட்சம் மதிப்பீட்டில் வளமாக்கப்படும் கழிவுகள் (biodegradable waste) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முயற்சியால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மக்கும் குப்பைகள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மூன்று பயன்கள் மக்களுக்கு கிடைக்கின்றன. ஒன்று, பயன்பாடற்ற குப்பைகள் அப்புறப்படுத்துதல், அதை திடக்கழிவு மேலாண்மையின் மூலம் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது, அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள் விவசாயத்திற்கு நுண்ணுயிர் சத்தாக பயன்படுத்தும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

Must Read | திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பயன்பாடற்ற பொருட்களை கூட பயன்படுத்தும் வகையிலான எண்ணற்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில், ஒன்றிற்கும் பயன்படாத பொருளை குப்பையில் போடுங்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால், இன்றோ குப்பைகளும் மக்களின் அத்தியாசிய தேவைக்கு உன்னதப் பொருளாக திகழ்கின்றன. அதுமட்டுமன்றி, நாள்தோறும் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் உருவாகும் கழிவுகளை அப்புறப்படுத்துவதால், அங்கு சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், அதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைக்கும், விவசாயத்திற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அந்த வகையில், காஞ்சிரங்கால் ஊராட்சியில் நாள் ஒன்றுக்கு 2 டன் குப்பைகள் அரைத்து திடக்கழிவு மூலம் மேலாண்மைத் திட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பணியாளர்கள் மட்டுமே போதுமானதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இங்கு நாள்தோறும் சேகரிக்கப்பட்டு வரும் திடக்கழிவுப் பொருட்களால் தயாரிக்கப்படும் பயோகேஸ் மூலம் மின்சாரம் மட்டுமன்றி, அதில் வரும் திரவ வடிவிலான கழிவுப்பொருட்கள் விவசாயப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது பயிர்களுக்கு நுண்ணுயிர்களைக் கொண்ட திரவ வடிவிலான ஊட்டச்சத்தாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு தயாரிக்கும் மின்சாரத்தின் மூலம் நாள்தோறும் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பயன்பெறுகின்றன. இதனால் மின்சாரம் சிக்கனம் மட்டுமின்றி ஊராட்சிக்கு வருவாயும் பெருகும். இத்திட்டத்தை மாவட்டத்தில் பல ஊராட்சிகளிலும் செயல்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் வளமீட்பு பூங்கா மற்றும் இயற்கை உரங்கள் என எண்ணற்ற திட்டங்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் பொருளாதார ரீதியாக ஊராட்சியின் வளர்ச்சியும் முன்னேற்றம் காணும். எனவே , ஊராட்சிகளின் வளர்ச்சிக்கேற்ப திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி பயன்பெற்றுக் கொள்ளலாம்.
Published by:Archana R
First published: