• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாவல் பழங்களை விற்று கடனை அடைக்கும் பள்ளி மாணவி!

நாவல் பழங்களை விற்று கடனை அடைக்கும் பள்ளி மாணவி!

மாணவி அஞ்சுகா

மாணவி அஞ்சுகா

கூலி வேலைக்கு செல்லும் தாய் ராதா செல்போனுக்கு  வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டமுடியாமல் தவிப்பதை நினைத்து வேதனையடைந்த அஞ்சுகா தன்னால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என நினைத்தார்.

  • Share this:
    ஆன்லைன் கல்விக்காக வாங்கிய செல்போனுக்கு வட்டி கட்டுவதற்காக பிளஸ்டூ மாணவி நாவல் பழம் விற்பனை செய்து வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நைனாபட்டியை சேர்ந்த மாணிக்கம் ராதா தம்பதி மகள் அஞ்சுகா. இவர் கானாடுகாத்தானில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தந்தை மாணிக்கம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததால் அவரது குடும்பம் வறுமையில் தவித்து வருகிறது. தாய் ராதாவும் சகோதரன் மணிராஜூன் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

    Also Read:  காமராஜர் திறந்த பள்ளிக்கு ஏற்பட்ட அவலநிலை – கட்டடம் கட்ட முன்னாள் மாணவர் முன்வந்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

    வறுமையில் வாடினாலும் மாணவி அஞ்சுகாவை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைக்கின்றனர். கொரோனா கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. செல்போன் வாங்க காசு இல்லாததால் அவரால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியவில்லை. செல்போனால் மகளின் படிப்பு தடைபடக்கூடாது  என்பதால் ரூ.7000 பழைய ஸ்மார்ட்போனை வாங்கிக்கொடுத்துள்ளார் தாய் ராதா.



    கூலி வேலைக்கு செல்லும் தாய் ராதா செல்போனுக்கு  வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டமுடியாமல் தவிப்பதை நினைத்து வேதனையடைந்த அஞ்சுகா தன்னால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என நினைத்தார். அப்பகுதியில் உள்ள நாவல் மரங்கள் அவரது கண்ணில் பட நாவல் பழங்களை பறித்து விற்பனை செய்து வருகிறார். திருச்சி பைபாஸ் சாலையில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக் கொண்டே நாவல் பழம் விற்பனை செய்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து அஞ்சுகா கூறுகையில், ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வேண்டும் என அம்மாவிடம் கூறினேன். கையில் காசு இல்லை என வருத்தப்பட்டார். கடன் வாங்கித்தாங்க நான் அடைச்சுக்கிறேன் சொல்லி போன் வாங்கினேன். நாவல் பழங்களை விற்பனை செய்துதான் கடனை கட்டி வருகிறேன். பாதிகடனை கட்டிவிட்டேன்.  ப்ள்ஸ் 2முடித்து விட்டு நிறைய படிக்க வேண்டும் என ஆசை. குடும்ப வறுமையால் அது எல்லாம் சாத்தியமாகாது என்பதால் நர்ஸிங் படிக்கலாம் என முடிவு செய்துள்ளேன்”என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: