கள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடையை அரசு திறக்கிறது: ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

திமுக அரசு அனைத்து கட்சியினரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். இது சரியான பாதை அறிஞர்கள், நிபுணர்களை கலந்து ஆலோசித்து அரசியல் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

 • Share this:
  கள்ளச்சாராயத்தை தடுக்கவே மதுக்கடையை அரசு திறக்கிறது  என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, தமிழகத்தில் திமுக அரசு முனைப்பாக சுறுசுறுப்பாக நிதானமாக செயல்படுகிறது.

  திமுக அரசு அனைத்து கட்சியினரையும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். இது சரியான பாதை அறிஞர்கள், நிபுணர்களை கலந்து ஆலோசித்து அரசியல் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டும்.

  இதே பாதையில் தொடர்ந்து பயணித்தால் நிலையான வேகமான வளர்ச்சி பல துறைகளில் தமிழ் நாட்டில் ஏற்படும் என்றார். இதை திமுக தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள் பின்பற்றுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி தான் என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், மதுக்கடை திறப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு மதுக்கடையை திறக்கக் கூடாது என்பதும் மதுவிலக்கு வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சி கொள்கை தான். ஆனால், கள்ளச்சாராயம் பெருகாது என உத்தரவாதம் கொடுத்தால்,  மதுக்கடையை மூட சொல்லலாம். மதுக்கடையை திறப்பதில்  எங்களுக்கு உடன்பாடு இல்லை இருந்தாலும், அரசு என்ன செய்வது என்று பதில் கூறினார்.

  செய்தியாளர் - முத்துராமலிங்கம்
  Published by:Esakki Raja
  First published: