மர்ம நோய் தாக்கி 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலி - பீதியில் ஆடு வளர்ப்போர்!

ஆடுகள்

ஆடுகளுக்கு மூக்கில் இருந்து சளி அதிமாக வந்து முச்சு விடமுடியாமல் இருந்து உள்ளது இதனால் மண்டை வீங்கி இறந்து போய் உள்ளது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புலிகுளம் கிராமத்தில் நோய் தாக்குதலால் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதால்  கிராம மக்கள் கவலையில்  ஆழ்ந்து உள்ளனர் . நோய் தாக்கி இறந்த ஆடுகளை கால்நடைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ள நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவை தொடர்ந்து கால்நடை துறை  இனை இயக்குனர் சஞ்சீவி தலமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

  மானாமதுரை அருகே சின்னகன்னனூர் ஊராட்சிக்கு உட்பட புலிக்குளம் கிராம பகுதியில் ஆடுவளர்ப்பு அதிகளவில்  இருந்து வருகின்றது. இந்த கிராமத்தை சேர்ந்த  செருவலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஆடுகள்தான் 50க்கும் மேற்பட்டவை  இறந்து உள்ளது. இந்த பகுதி கால்நடை வளர்ப்பை நம்பி தான் இருந்து வருகின்றது. மேலும் இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக , ஆடு வளர்ப்பு இருந்து வருகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒன்று முதல் 5  ஆடுகள் வரை இறந்து வருகின்றது. இது கூறித்து முதல்வர் தனி பிரிவுக்கும் மாவட்ட கால்நடைத்துறையினருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

  மேலும் புலிகுளத்தில் பல்வேறு நபர்களின் ஆடுகள் நோய் தாக்குதலுக்கு இறந்து போய் உள்ளது. என்ன நோய் தாக்கியது , தொடர்ந்து ஆடுகள் காரணமின்றி இறந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கால்நடைதுறை. இணை  இயக்குனர் சஞ்சீவி ,தலைமையில் ஆடுகளை பரிசோதனை செய்து உள்ளனர் மேலும்  ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டன.

  இது குறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் சஞ்சீவி கூறுகையில், “ஆடுகளை பரிசோதனை செய்து உள்ளோம். மேலும் ஆடுகளுக்கு மூக்கில் இருந்து சளி அதிமாக வந்து முச்சு விடமுடியாமல் இருந்து உள்ளது இதனால் மண்டை வீங்கி இறந்து போய் உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்ததாக கணக்கு கூறி உள்ளனர் குறிப்பாக  கால்நடை துறையினருக்கு ஆடு வளர்ப்பவர்கள் நோய் தாக்குதல் பற்றி  தகவல் தெரிவிக்கவில்லை எனவும் அவர்களாகவே மருந்தகத்தில் ஊசி வாங்கி பயன்படுத்தி உள்ளனர் என்றும் தற்போது ஆய்வு செய்து உள்ளோம் இரண்டு தினங்களுக்கு பிறகே என்ன நோய் தாக்கியது என்பது தெரியவரும் என்றார்.

  செய்தியாளர் : சிதம்பரம்,  மானாமதுரை
  Published by:Arun
  First published: