சிவகங்கை மாவட்டத்தில் வாழை விளைச்சல் அதிகரிப்பு காரணமாக மலம்பட்டி சந்தைக்கு ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அதிக அளவில் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. அவர்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மலம்பட்டியில் வாழை சந்தை வாரம் தோறும் நடைபெறும். சுற்று வட்டாரப் பகுதிகளான சருகுவலை யபட்டி , கீழப்பூங்குடி, கீழையூர், சுக்காம்பட்டி, சூரக்குண்டு, வெள்ளாளபட்டி, சாலுார், கொட் டகுடி, மானாமதுரை, மேலுார் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழை தார்களை விற் பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காரணமாக வாழைத் தார்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்ற நம் பிக்கையில் விவசாயிகள் வாழைத்தார்களை விற் பனைக்கு கொண்டு வந்திருந்த நிலையில், விவசாயிகள் எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை . விளைச்சல் அமோகமாக இருந்ததால் ரஸ்தாளி, நாடு, பூவன், பச்சை , ஒட் டுரகங்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
நாடு ரக தார்கள் 150 முதல் 400 ரூபாயாகவும், பூவன் ரகம் 100 முதல் 500 ரூபாய், ரஸ்தாளி 100 முதல் 400 ரூபாய், பச்சை 200 முதல் 350 ரூபாய், ஒட்டு ரகம் சரவணன் 200 முதல் 250 ரூபாய் வரை விளைச்சலுக்கு ஏற்ப விற்பனையானது.
இது குறித்து கள்ளர்வலசை வாழை விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ஒட்டு ரக காய் விளைச்சல் இருந்தது. மானாமதுரையில் விலை கிடைக்காததால் மலம்பட்டி சந்தைக்கு கொண்டு வந்துள்ளேன். ஒட்டு ரகம் வாழைத்தார் ஒன்றுக்கு 50 முதல் 70 ரூபாய்க்கு விற்பனையானது.
Must Read : ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீர் : ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கொரோனா காலகட் டத்தில் விலையில்லாமல் மரத்திலேயே பழுத்தது, வீணாக போவதற்கு தற்போது பரவாயில்லை ஓரளவு விலை கிடைக் கிறது என்று கூறி அறுதடைந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayudha poojai, Banana