சிவகங்கையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு 100 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 101 வது மனு உட்பட பல்வெறு மனுக்களை கழுத்தில் மாலையாக அனிந்து வந்து விவசாயி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் மாதம் ஒரு முறை நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில் கண்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி கருப்பையா என்பவர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏற்கனவே 100 முறை மனு அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இன்று மீண்டும் அதே கோரிக்கை குறித்து 101 வது மனுவை அளிக்கவந்த கருப்பையா நூதன முறையில் இதுவரை தான் அளித்த மனுக்களின் நகல்களை லேமினேஷன் செய்து கழுத்தில் மாலையாக அணிவித்தும் கையில் மனுக்களையும் கொண்டுவந்து மீண்டும் ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தார். இது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : சிதம்பரநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.