Home /News /tamil-nadu /

சிவகங்கை சிறுவனின் அதீத நினைவாற்றல் - சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தல்

சிவகங்கை சிறுவனின் அதீத நினைவாற்றல் - சாதனை புத்தகங்களில் இடம்பிடித்து அசத்தல்

சிறுவன் மாயன்

சிறுவன் மாயன்

இதுவரை இந்த சாதனை செய்த சிறுவர்கள் 4வயதுக்கு மேல் உள்ளவர்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்த பாலாஜி மற்றும் நந்தினி தம்பதியின் இரண்டரை வயது மகன் மாயன், இந்த வயது குழந்தைகளுக்கு சரியாக பேசுவது என்றாலே மிகப்பெரிய விஷயம், ஆனால் இச்சிறுவனுக்கு சிறுவயது முதலே அதீத நினைவு ஆற்றல் இருந்திருக்கிறது , எந்த ஒரு பெயரை சொன்னாலும் ,படத்தை காட்டினாலும், அதை மறக்காமல் ஞாபகப்படுத்தி எத்தனை நாள் கழித்து கேட்டாலும் சொல்லும் அளவுக்கு நினைவாற்றல் இருந்துள்ளது. இதை உணர்ந்த இவர் பெற்றோர்கள் இவருக்கு முதலில் தலைவர்கள் படங்கள் பழங்கள் போன்ற படங்களை கற்று கொடுத்துள்ளன அதை மிக வேகமாக காற்று உடனே சொல்லியுள்ளார் .

    இதனை தொடர்ந்து 247 தமிழ் எழுத்துக்கள், எண்கள் ,வாகனங்கள் ஆங்கில மாதங்கள் ,தமிழ் மாதங்கள், மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள் ,வடிவங்கள் ஆகியவற்றை ஆல்பங்கள் ஆக தயாரித்து கற்றுக் கொடுத்துள்ளனர் அதை வேகவேகமாக கற்றுக் கொண்டு மழலை குரலில் வேகமாக கூறியுள்ளார்.

    இவரின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்தும் வகையில் இவரின் சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற இரு சாதனை புத்தகங்களிலும் இவரின் சாதனை இடம்பெற்றுள்ளது.

    Also read :  போலீஸ்காரரின் எலும்புகளை உடைத்த Swiggy டெலிவரி பாய் - சென்னையில் பரபரப்பு சம்பவம்

    இதுவரை இந்த சாதனை செய்த சிறுவர்கள் 4வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இரண்டரை வயதில் சரியாகபேச கூட தெரியாது குழந்தைகள் மத்தியில் இவர் நினைவாற்றல் வியப்பாகவே இருக்கிறது.

    மேலும் தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் கையில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் திறமைகளை கேம் ஆடுவதில் செலவழிக்கின்றனர் இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது .

    மகன் மாயனுடன் தாய் நந்தினி


    இச்சிறுவனின் தாய் நந்தினி கூறுகையில், எனது மகனிடம் அதிக நினைவாற்றல் இருப்பதை அறிந்தோம். இரண்டு வயது முதல், தலைவர்களின் படங்கள், தமிழ் எழுத்துக்கள், ஆங்கில எழுத்துக்கள், தமிழ் மாதங்கள், ஆங்கில மாதங்கள், எண்கள், தலைநகரங்கள், மாவட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுத்தோம்.

    Also read:  ஒரு இளைஞருக்காக +2 மாணவிகள் இருவர் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை - தனுஷ் பட பாணியில் சம்பவம்..

    அனைத்தையும் வேகமாக கற்றுக்கொண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இரண்டிலும் இவர் சாதனை பதிவாகி உள்ளது இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் இவர் இன்னும் பல சாதனைகள் புரிய எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் முயற்சிகளையும் செய்து வருகிறோம் எதிர்காலத்தில் மிகப் பெரிய சாதனையாளராக வேண்டும் எங்கள் ஆசை என தெரிவித்தார்.

    சிதம்பரம் - செய்தியாளர், சிவகங்கை
    Published by:Arun
    First published:

    Tags: Sivagangai

    அடுத்த செய்தி