காய்கறி கழிவில் மின்சாரம்: வருடத்திற்கு ரூ.12 லட்சம் மிச்சப்படுத்தும் ஊராட்சி

சிவகங்கை

இந்த மின்சாரம் முழுவதும் காஞ்சிரங்கால் ஊராட்சி தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு மின்கட்டணம் குறையும்.

  • Share this:
காய்கறி கழிவுகளில் மின்சாரம் உற்பத்தி செய்து பேட்டரி வாகனங்களுக்கு ரீசார்ஜ் செய்வதுடன், தெருவிளக்கு எரிவதற்கும் பயன்படுத்தும் ஊராட்சி நிர்வாகம்.

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதன் மூலம் ஊராட்சி பகுதிக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களை ரீசார்ச் செய்ய பயன்படுத்துவதுடன் தெருவிளக்கு அரசு கட்டிடங்களின் மின்சார பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி மின் கட்டனத்தையும் சேமித்து வருகிறது.

புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக நாடுகளே ஒன்றினைந்து போராடிவரும் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளதுடன் அதனை செயல்படுத்த ஐ.நா சபையே பெரும் முயற்சி மேற்கொண்டு மரபுசாரா எரிசக்தி திறனை தற்சமயம் ஊக்குவித்து வருகிறது. அதன் அடிப்படையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தல், அதிக புகையை வெளிப்படுத்தும் வாகனங்களை மாற்றி பேட்டரி வாகானங்களின் தேவையை அதிகப்படுத்துதல் எனவும் அதனை ஊக்குவிக்க அதிக மானியம் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Also Read: நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி: வரவேற்பு ஊர்வலத்திலிருந்து பாதியில் வெளியேறினார்!

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மாவட்டத்திலே முதன் முறையாக டெக்னாலஜி  முலம்  சிவகங்கை அருகேவுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில்  ரூ66 லட்சம் திட்ட மதிப்பில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சிறு ஆலையை உருவாக்கியதுடன் அதனை வெற்றி முறையில் அமல்படுத்தியும் உள்ளார்.

சிவகங்கை


கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுப்பொருள் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவுப்பொருள் கழிவுகள் சேகரிக்கப்படும். பிறகு அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுவர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறும். பிறகு அதன்மூலம் ஜெனரேட்டரை இயக்கி 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க உள்ளனர்.

Also Read:   ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை – தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

இந்த மின்சாரம் முழுவதும் காஞ்சிரங்கால் ஊராட்சி தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு மின்கட்டணம் குறையும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதசூதன் ரெட்டி கூறுகையில் வீடுதோறும் குப்பைகளை எடுத்து பேட்ரி  வாகனம் சென்று எடுத்து வருகின்றோம் விரைவில் படிப்படியாக அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தபடும் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து கூறும்போது இந்த திட்டத்தின் முலம் 12லட்சம் ருபாய் வருடத்திற்கு சேமிக்க படும் இதன் முலம் ஊராட்சி வளர்ச்சி பெரிதும் உதவும் என்கின்றார்

செய்தியாளர்: சிதம்பரம், சிவகங்கை 
Published by:Arun
First published: