சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றதால் ஏரியூர் ஏரி கண்மாய் விழாக்கோலம் பூண்டது.
திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி 350 ஏக்கர் பரப்பரளவு கொண்ட ஏரியூர் ஏரி கண்மாய் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழையால் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. தொடர்ந்து விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியது.
இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கிராம மக்கள் ஒற்றுமையாக மீன்பிடிக்க முடிவு செய்து இணைய வழியில் அறிவித்தனர். இதனால் சுற்று பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீன் பிடிப்பதற்கு அதிகாலையிலேயே வருகை தந்து மீன்பிடி வலை உள்ளிட்ட உபரகணங்களுடன் காத்திருந்தனர்.
கிராம முக்கியஸ்தர்கள் கடவுளை வணங்கி வானவெடி வெடித்து மீன் பிடிக்க அனுமதி வழங்கியதும் குடும்பம் குடும்பமாக வருகை தந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமரர் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டு கொண்டு கண்மாயில் அரிவலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு ஜாதி மத வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக கண்மாயில் கிடைத்த விரா, கட்லா, ஜிலேப்பி, கெழுத்தி , மீன்களை பிடித்து சென்றனர்.
Must Read : அசானி புயல்... தமிழகம், புதுவையில் இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்
இந்த மீன்பிடி திருவிழாவில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டதால் ஏரி கண்மாய் பகுதி விழாக்கோலம் பூண்டது.
செய்தியாளர் - முத்துராமலிங்கம், காரைக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Fish, Sivagangai