சிவகங்கை அருகே பொங்கல் வைப்பதில் எற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது இலந்தைகுளம் கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் விழா 15ம் தேதி இரவு கொண்டப்பட்டது. அப்போது, அதே ஊரே சேர்ந்த நாச்சான் மகன் கருப்புச்சாமி (28) என்ற இளைஞர் ஊரில் உள்ளவர்களுடன் சேர்ந்து பொங்கள் வைத்துள்ளார். அப்போது, அந்த ஊரின் ஊராட்சி துணை தலைவர் ரவி, தன்னை கேட்காமல் பொங்கல் ஏன் வைத்தீர்கள் என கேட்டுள்ளார். இதில் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சமூக மோதலில் முடிந்த செல்ஃபி மோகம்..போலீஸ் குவிப்பு
இதையடுத்து, ஊராட்சி துணை தலைவர் ரவியின் மகன்கள் சிவா, சிவாநாதம், ராஜ்குமார் மற்றும் ரவியின் உறவினர்கள் சேர்ந்து கருப்புச்சாமி மற்றும் கருப்பச்சாமி நண்பர் அருண்குமார் ஆகியோரை தாக்கி உள்ளனர்.
இதில் விலங்குகளை தாக்கும் ஆயூத்தை கொண்டு கருப்புச்சாமியை குத்தி உள்ளனர். இதில் கருப்பு சாமி குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் திருப்புவனம் போலீசார் ஊராட்சி துணைத்தலைவர் மகன்களான சிவா, சிவநாதம், ராஜ்குமார் மற்றும் சரத்குமார், கண்ணன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: சட்டக் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்? போலீஸார் மீது குற்றச்சாட்டு இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.