Keezhadi Excavation | கீழடியில் மூடியுடன் கூடிய முழு வடிவிலான மண்பானை கண்டெடுப்பு...  2,000 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல்துறை தகவல்

2000 வருடம் முன்பு தமிழர்கள் பயன்படுத்திய முழு வடிவிலான மண்பானை

கீழடியில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் மூடியுடன் கூடிய முழு வடிவிலான மண்பானை மற்றும் நம் முன்னோர்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய கருங்கற்கள் புதிதாக  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வின்போது அக்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், மனித எலும்பு கூடுகள் உள்ளிட்டவைகளை தொல்லியல் துறையினர் கண்டெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கீழடியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூடியுடன் கூடிய ழுழு வடிவிலான மண்பானைகள் மற்றும் கருங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...Thoothukudi | கப்பலுக்குள் இந்தியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் பின்னணியா?

இதுவரை நடந்த அகழாய்வில் மண்பானைகள் பெரும்பாலும் சிதைந்த நிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்பானை மூடியுடன் முழுமையான வடிவத்துடன் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்துடனும் கிடைத்துள்ளது. 2000 ஆண்டுகள் ஆகியும் மண்பானை அதன் மீது இருக்கும் மூடியும் சிதையாமல் முழுமையாக கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவை ஆராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: