தேவக்கோட்டையில் கலப்பு திருமணம் செய்த வாலிபர் வெட்டிப்படுகொலை - காவல்துறையினர் விசாரணை

கொலை செய்யப்பட்ட சிவா

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டிக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  • Share this:
    தேவக்கோட்டையில் கலப்புத் திருமணம் செய்துக்கொண்ட வாலிபர் வெட்டிப்படுகொலை செய்து சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுவத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிவா வயது 32. இவர் அந்தப்பகுதியில்  பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் யுவப்ரியன் என்ற மகனும், 4 வயதில் ஸ்ரீநயா என்ற மகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் சிறுவத்தி கிராமத்தில் வசித்து வந்தார்.

    சிவா நேற்று இரவு தேவக்கோட்டையில் இருந்து தனது சிறுவத்திகிராமத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சிவாவை வழியில் இடைமறித்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.  உயிருக்கு பயந்த சிவா சிறுவத்திகிராம வயல் வெளியில் வெட்டுக்காயங்களுடன் ஓடியுள்ளனர். சிவாவை விடாது தொடர்ந்து  விரட்டிய அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவேகம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சிவாவின் உடலை கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக தேவக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காரைக்குடி செய்தியாளர்:  முத்துராமலிங்கம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: