கிராம மக்களுக்கு தினமும் நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள், 6 வகை மூலிகை சூப்... அசத்தும் கிராம வாட்ஸ் அப் குழுவினர்!

கானூர் கிராமத்தில் அசத்தும் கிராம வாட்ஸ் அப் குழுவினர்!

தினமும் அதிகாலையில் தயாராகும் முலிகை சூப், பயறு வகைகள், சமுக இடைவெளிவிட்டு வாங்கி செல்லும் மக்கள் 

 • Share this:
   

  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கானுர் கிராமம். இங்கு 500 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர்.
  இந்த கிராமத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உண்மை ,உழைப்பு, உயர்வு வாட்ஸ்ப் குழு ஆரம்பித்து கிராமத்திற்கு தேவையானதை செய்து வருகின்றது இந்த குழு .

  தற்போது கொரோனா 2வது  அலை கிராம பகுதியில் அதிமாக பரவி வருகிறது. இதில் இருந்து முன் எச்சரிக்கையாக ஒட்டு மொத்த கிராமத்தையும் காக்க வேண்டும் , ஒருவருக்கு கூட கொரோனா வாரத கிராமமாகவும் இருக்க வேண்டும் அதற்கு  என்ன செய்ய வேண்டும்  என யோசித்த வாட்ஸ்ப் குழுவினர்  ஒட்டு மொத்த கிராமத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என யோசித்து தற்போது இச்செயலை ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.

  கடந்த 10தினங்கள் மேலாக கிராமத்தின் சமுதாய கூடத்தில் தினமும்அதிகாலை 4மணிக்கு வேலையை தொடங்கி வருகின்றனர்.  ஒவ்வொரு நாளும் முருங்கை சூப், கபசுர குடிநீர், தூதுவளை சூப், வெஜிடபில் சூப்,காளன் சூப், வாழை தண்டு, முட்டை, பயறு வகையான கொண்டக்கடலை, நில கடலை ஆகியவற்றை சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை  ஒட்டு மொத்த  கிராம மக்களுக்கு 7 மணிக்குள் வழங்கி வருகின்றனர்.

  அதிகாலையில் தயாராகும் மூலிகை சூப்


  இதற்கு முக்கியமாக விளங்கி வருபவர் உண்மை, உழைப்பு, உயர்வு, குழுவின் சோமசுந்தரம் என்பவர்.  அவரது குழுவை  சேர்ந்த சூப் தயாரிக்கும் பொன் முத்துராமலிங்கம் கூறுகையில்

  நான் என் குடுபத்துடன் சென்னையில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தேன். தற்போது கொரோனா ஊரடங்கால் எனது  சொந்த ஊரான கானூர் கிராமத்திற்கு வந்து விட்டேன் இந்த வாட்ஸப்  குழுவில் நானும் இருப்பதால் என்ன செய்ய வேண்டும்  என யோசித்து பிறகு முடிவு செய்து, நானே தினமும் இயற்கை முறையில் சத்தான  சூப் வைத்து அதனை கொடுத்துவருவதாக தெரிவித்தார்.

  இந்த கிராமத்தை சேர்ந்த வைஷ்ணவி தேவி கூறுகையில்,

  எங்கள் கிராமத்தில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகின்றனர். தற்போது கொரோனா பிரச்னை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. எங்களுக்கு தினந்தோறும் ஒவ்வொரு வகை சத்தான சூப் வைத்து. எங்களின் கிராமம் முழுவதும் மக்களுக்கு கொடுத்து வருகின்றர்கள். இதுவரை எங்கள் கிராமம் கொரோனா தொற்று இல்லாத கிராமமாக இருந்து வருகின்றது என்றார் .


  சமூக இடைவெளியுடன் சூப் வாங்குவதற்காக காத்திருக்கும் கிராமத்தினர்


  இந்த ஊரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் கூறுகையில் ,

  இந்த கொரோனா காலம் மிக மோசமாக இருந்து வருகின்றது. இந்த கொரோனாவை ஜெயித்து ஆக வேண்டும். இதற்காக இரு முடிவு எடுத்து உள்ளோம். உடலை நோய் வராமல் எப்படி வைத்து கொள்ள வேண்டும். அதற்கு என்ன தேவை என முடிவு செய்தோம் .

  Read More:   ஆந்திராவுக்கு எல்லைதாண்டி படையெடுக்கும் தமிழக மதுபிரியர்கள்! 

  ஒரு பக்கம் அரசு தடுப்பூசி முகாம்  தீவிரமாக நடத்தி வந்தாலும் அதற்கு முன் நம்  உடம்பை ஹெல்த்தியாக வைத்து கொள்ள வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்து தற்போது இதனை செய்து வருகின்றோம் என்றார்.

   

  சிவகங்கை செய்தியாளர் சிதம்பரம்
  Published by:Arun
  First published: