கொரோனா பாதித்தவரை கலெக்டர் அலுவலகம் வரவழைத்த இன்சூரன்ஸ் திட்ட அதிகாரிகள் - சிவகங்கையில் பரபரப்பு

ஆம்புலன்ஸ்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு திட்ட அலுவலர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மதுரையில் சிகிச்சை பெற்று வந்தவரை ஆம்புலண்ஸ் மூலம் அழைத்துவர சொல்லி அழைக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் திருப்புவணம் அருகே லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரபு. இவர் திருமணமான நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் தமிழக முதல்வர் கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் ராஜபிரபுவிடம் காப்பீடு அட்டை இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து உறவினர் ஒருவர் சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காப்பீடு அலுவலகத்தை அனுகி அங்குள்ள அலுவலரிடம் கேட்டதற்கு பாதிப்புக்குள்ளானவரை நேரில் அழைத்துவர அறிவுருத்தியுள்ளனர்.

  இதனை தொடர்ந்து அவரை ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸ் மூலம் அவரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு அலுவலகத்திற்கு அழைத்துவந்தனர்.

  இதனை கண்ட அங்கிருந்த மற்ற அலுவலர்கள் அச்சமடைந்ததுடன் ஆட்சியருக்கு தகவல் தந்ததை தொடர்ந்து அவர் உடனடியாக அங்குவந்து பாதிப்புக்குள்ளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியதுடன் அங்கிருந்த காப்பீடு திட்ட அதிகாரிகளிடம் இதுபோல் அழைத்துவர வலியுறுத்த கூடாது என எச்சரித்து அனுப்பினார்.

  Must Read : 3 முறை தொற்று.. மன உறுதியுடன் இருந்து கொரோனாவை வென்ற பெண்...!

   

  நோயாளியை 50 கிலோ மீட்டர் தூரம் மருத்துவகாப்பீடு அட்டைக்காக அழைத்துவந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Suresh V
  First published: