பாஜக ஹெச் ராஜாவை தோற்கடித்த மாங்குடி... மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் சாதனை...

பாஜக ஹெச் ராஜாவை தோற்கடித்த மாங்குடி... மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் சாதனை...

காங்கிரஸ் வேட்பாளர் - மாங்குடி

காரைக்குடி சட்ட மன்ற தொகுதியில் இதுவரை தொடர்ச்சியாக எந்த கட்சியும் வென்றதில்லை என்பதை முறியடித்து, காங்கிரஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 6ம் தேதி பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள்  காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அதிமுக கூட்டணி பாஜக சார்பில் எச்.ராஜா, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் துரை மாணிக்கம், மக்கள் நீதி மையம் சார்பில் ராஜ்குமார் உள்பட 13 வேட்பாளர்கள்  போட்டியிட்டனர். இதில் 3575 தபால் வாக்குகள்  உட்பட மொத்தம் 2,13,548 ஓட்டுகள் பதிவானது. 443 பூத்களில் பதிவான வாக்குகள்  32 சுற்றுகளாக எண்ணப்பட்டது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலை வகித்தார். முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 21,589 வாக்குகள் கூடுதலாக பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை தோற்கடித்தார். காரைக்குடி சட்ட மன்ற தொகுதியில் இதுவரை தொடர்ச்சியாக எந்த கட்சியும் வென்றதில்லை என்றதை முறியடித்து 2016 , 2021 தேர்தல்களில் தொடர்ந்து வென்று காங்கிரஸ் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளது.

    மேலும் படிக்க... புதுச்சேரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

    செய்தியாளர்: முத்துராமலிங்கம், காரைக்குடி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: