அடிமட்டத்தில் அதிமுக ஆரோக்யமாக உள்ளது. கட்சி தலைமை தான் சரியாக அமையவில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுப்பதை ஏற்க முடியாது. ஆனால் ராஜாங்க ரீதியாக காலங்காலமாக இந்தியா ரஷ்யாவுடன் உறவு வைத்துள்ளது. இதனால் இந்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை உள்ளது. இந்தியாவின் முதல் குறிக்கோள் நமது நாட்டு மாணவர்களை மீட்பது தான்.
தமிழகத்தில் தேர்தல் என்பது எப்படி நடக்கிறது. எந்த காரணத்திற்காக மக்கள் வாக்களிக்கின்றனர். பிரதிநிதிகள் என்ன யுத்திகளை கையாண்டு வென்றார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும் குறை சொல்ல முடியாது.தமிழகத்தில் பாஜகவிற்கு பரவலாக ஆதரவு இல்லை. கன்னியாகுமரி போன்ற ஒருசில பகுதிகளில் மட்டும் ஆதரவு இருந்திருக்கும். நாங்கள் கூட்டணியில் நின்றதால் பிரித்து பார்க்க முடியவில்லை. வெற்றி பெற்ற இடங்களை பார்த்தால் அவர்கள் மூன்றாவது இடத்தில் இல்லை. அவர்கள் வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு செய்யும் பிரச்சாரத்தை ஏற்க முடியாது.தமிழக மக்கள் பாஜகவை ஏற்கவில்லை.
நாங்கள் ஒரு அணியில் சேர்ந்தால் அந்த கூட்டணிக்கு பெருக்கல் தான். ஆனால் பாஜக, ஒரு அணியில் சேர்ந்தால், அது அந்த கூட்டணிக்கு வகுத்தாலாக தான் அமையும். அதிமுக படுதோல்வி என்பதை ஏற்க மாட்டேன். அவர்கள் வாக்கு வங்கி குறையவில்லை. அப்படியே தான் உள்ளது. அடிமட்டத்தில் அதிமுக ஆரோக்யமாக உள்ளது. கட்சி தலைமை தான் சரியாக அமையவில்லை என்று கூறினார்.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.