• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செங்கல் சூளையில் சிக்கித் தவித்த 66 பேர் - அமைச்சர் உத்தரவால் தனி பேருந்தில் அழைத்து வந்த மாவட்ட நிர்வாகம்

செங்கல் சூளையில் சிக்கித் தவித்த 66 பேர் - அமைச்சர் உத்தரவால் தனி பேருந்தில் அழைத்து வந்த மாவட்ட நிர்வாகம்

உதவிகள் வழங்கும் அமைச்சர்

உதவிகள் வழங்கும் அமைச்சர்

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து முடங்கிக்கிடந்த கடந்த கிராம மக்களை அழைத்து வந்து உதவிய மாவட்ட நிர்வாகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

  • Share this:
அமைச்சரின் உத்தரவின் பேரில் வெளியூருக்கு சென்று செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வந்த 66 பேரை தனி பேருந்தில் அழைத்து வந்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கி மாவட்ட நிர்வாகம் உதவி செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தமராக்கி, இடையமேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 66 பேர் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகளில் பணிபுரிந்து வந்தனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலையின்றி தவித்து வந்த அவர்கள் அமைச்சர் பாஸ்கரனிடம் போன் செய்து உதவி கேட்டனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் துரிதமாக விசாரித்து சிவகங்கையிலிருந்து தனிபேருந்து ஏற்பாடு செய்து கோவையில் இருந்த 66 பேரை மருத்துவ பரிசோனை முடிந்து தனி பேருந்தில் அழைத்து வந்து சிவகங்கையில் உணவு அத்தியாவசிய பொருட்கள், அரிசி, காய்கறி, பலசரக்கு பொருட்களை வழங்கி அவரவர் கிராமங்களில் அதே பேருந்தில் கொண்டு சென்று விட்டனர்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து முடங்கிக்கிடந்த கடந்த கிராம மக்களை அழைத்து வந்து உதவிய மாவட்ட நிர்வாகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: