Home /News /tamil-nadu /

சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் மானாமதுரை... பூஜையுடன் தொடங்கி வைத்த ஆட்சியர்

சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் மானாமதுரை... பூஜையுடன் தொடங்கி வைத்த ஆட்சியர்

பூஜையுடன் தொடங்கி வைத்த ஆட்சியர்

பூஜையுடன் தொடங்கி வைத்த ஆட்சியர்

Chitrai Festival in Manamadurai ’ வைகை ஆற்றை பார்வையிட்டு  வைகை ஆற்றுக்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், மேடு பள்ளங்களை சீரமைக்கவும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மானாமதுரையில் சித்திரை திருவிழா துவங்கும் முன் வைகை ஆறு சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிறைவேற்றியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி - சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா மதுரைக்கு அடுத்தாற்போல் மானாமதுரை வைகை ஆற்றில் தொடர்ந்து 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம் . விழாவின் முக்கிய அம்சமாக ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் , தேரோட்டம் , வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி போன்ற விழாக்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர்.



    மேலும் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகளும் சிறுவர்கள் கொண்டாடி மகிழ ராட்டினங்கள், மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்,  உள்ளிட்டவைகளும் அடங்கும். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனோ தொற்று காரணமாக சித்திரைத் திருவிழா நடைபெறாமல் இருந்ததினால் பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற அரசு அனுமதி வழங்கியதையடுத்து தற்போது மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலை ஒட்டிய வைகை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று  பொதுமக்கள் நகராட்சி கமிஷ்னரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி கமிஷ்னர் கண்ணன்  மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டிக்கு கோரிக்கை வைத்தார்.



    இதையடுத்து வைகை ஆற்றை பார்வையிட்டு  வைகை ஆற்றுக்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவும், மேடு பள்ளங்களை சீரமைக்கவும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    செய்தியாளர் : சிதம்பரநாதன்.வி, சிவகங்கை மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Manamadurai, Vaigai

    அடுத்த செய்தி