நீட் தேர்வை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத்தக்கது, அது தொடர வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மத்திய அரசு தான் காரணம். சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் கொள்முதல் இல்லாதது, உற்பத்தியை அதிகரிக்காமல் தவறான கொள்கைகளால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு முறையாக தடுப்பூசிகள் வழங்கப்படாத காரணத்தினால் இன்று இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை இந்தியா அளவில் 5 சதவீதமாக தான் உள்ளது.
மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாகுபாடு உள்ளது. மேலை நாடுகளில் 65% முதல் 70% பேர் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலே தடுப்பூசி போட்டு உள்ளார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஊரடங்கு அமல்படுத்துவதன் மூலம் நோய் பரவலை தான் தடுக்க முடியும். தடுப்பூசியால் மட்டுமே தீர்வு கிடைக்கும். தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுக்கு கொடுத்தால், ஆரம்ப சுகாதார நிலையம் வரை மருத்துவ வசதிகள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளது முழுமையாக தடுப்பூசிகள் போடலாம் என்றார்.
Also read: 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் - கமல்ஹாசன்
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது. சில மாநில அரசுகளும் தேர்வு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். தமிழகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் முடிவு தெரிய வரும். 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தி மதிப்பெண்கள் பெற்றால் தான் கல்லூரிகளில் மேல்கல்வி தொடர முடியும். என்னைப் பொறுத்தவரை தேர்வை நடத்தி தேர்வு மதிப்பெண்கள் மூலம் கல்லூரி செல்வது நல்லது. மாறாக நடத்தினால் ஏற்ற தாழ்வு ஏற்படும் என்று கூறினார்.
மேலும், நீட் தேர்வை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது வரவேற்கத்தக்கது. அது தொடர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.