சிவகங்கை அருகே அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகளை அதிகாரிகள் ஏற்காததால், விவசாயிகள் அங்கேயே காத்திருக்கும் நிலையில், கால்நடைகள் நெல் மூட்டைகளை துளைத்து மேயும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கையை அடுத்துள்ள பெருமாள்பட்டியில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நெல்கொள்முதல் நிலையத்தில் பில்லூரை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த நெல்லை முறையாக ஆன் லைன் மூலம் பதிவு செய்ததுடன் வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சுமார் 20 கி.மீ தூரம் கொண்டுவந்து நிலையத்தில் இறக்கி வைத்துள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதி இறக்கிவைக்கப்பட்ட அந்த நெல் மூட்டையை அங்குள்ள அதிகாரிகள் இதுவரையிலும் ஏற்காமல், நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து கிடப்பதுடன், அப்பகுதியில் சுற்றித் திரியும் கால்நடைகள் மூட்டையை துளையிட்டு மேய்ந்து வருகின்றன.

நெல்மூட்டைகளை மேயும் கால்நடைகள்
அது குறித்து விவசாயிகள் கேட்டதற்கு, இப்பகுதியில் போதுமான நெல் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு மூட உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Must Read : டீசல் விலை உயர்வு... அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..

நெல்மூட்டைகளை மேயும் கால்நடைகள்
கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டும் அதிகாரிகள் ஏற்க மறுப்பதாலும் நெல் மூட்டைகளை கால்நடைகள் மேய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செய்தியாளர் : சிதம்பரம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.