ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் அழகிரி அலறுவது ஏன்? - பாஜக எச்.ராஜா கேள்வி

திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் அழகிரி அலறுவது ஏன்? - பாஜக எச்.ராஜா கேள்வி

எச்.ராஜா - கே.எஸ்.அழகிரி

எச்.ராஜா - கே.எஸ்.அழகிரி

ஆளுநர் மாற்றத்திற்கு  காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஏன் அலறுகிறார் என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காவல்துறை விநாயகரை திருடுகிறது சிலையை உடைக்கிறது இது வன்மையாக கண்டிக்கதக்கது என எச்.ராஜா கூறியுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க-வின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது இல்லத்தில் 6 அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ” தமிழகத்தில் ஆண்டுதோரும் விநாயகர்சதுர்த்தி அன்று பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து சமூதாய ஒற்றுமைக்காக எல்லா பகுதிகளிலும் வழிபட்டு ஊர்வலம் சென்று கரைப்பது வழக்கம் தமிழ அரசு மத்திய அரசு வழிகாட்டுதலை  பின்பற்றுவதாக கூறி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளனர்.

  Also Read:  மதநல்லிணக்க விநாயகருக்கு சதுர்த்தி விழா: மும்மதத்தினர் கலந்துகொண்டு வழிபாடு!

  பக்ரித் பண்டிக்கையின் போது வீதிகளில் தொழுகைக்கு அனுமதி அளித்தனர். அது எந்தவிதத்தில் நியாயம் மத்திய அரசு வழிகாட்டுதலை எல்லா மதத்திற்கும் பின்பற்றினால் அது நேர்மையான அரசு. கரூரில் ஒரு காவல் அதிகாரி விநாயகர் சிலையை உடைக்கிறார் தமிழகம் முழுவதும்  விநாயகர் சிலை செய்யும் இடங்களில்  பூட்டு போடப்பட்டுள்ளது.போலீஸ் விநாயகர்  சிலையை திருடலாமா? நாட்டுக்கு காவல் அளிக்கும் போலீஸ் விநாயகர் சிலையை திருடுவது அராஜாகத்தின் உச்சகட்டம் என்றார்.

  மேலும் காவல்துறை தலைவர் அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர்கள் திகவா? ,விசிகா? ,கம்யூனிஸ்டா? எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தாக வேண்டும் .நாட்டுக்கு எதிராக இவர்கள் செயல்பட மாட்டார்கள் என்று எப்படி உறுதியாக சொல்லமுடியும். பெரும்பாண்மை சமூகத்திற்கு எதிராக இந்துமத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக பல காவல் அதிகாரிகள் செயல்பட்டு இருப்பது கண்டிக்கதக்கது.அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

  Also Read:  விநாயகர் சதுர்த்தி விழாவில் மணியடித்து பூஜை செய்த முதுமலை யானைகள்..

  செப்டம்பர் 17 சமூகநீதி நாள் என்பதை ஏற்றுகொள்கிறேன். நாடு சுதந்திரமடைந்து 68 வருடமாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காத ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிற்பட்ட சமுதாயத்தின் எதிரிகள். ஒ.பி.சி க்கு இடஒதுக்கீடு ஆல் இந்தியா மெடிக்கல் படிப்பில பிற்பட்டோருக்கு  27% ஒதுக்கீடு வழங்கிய  பிரதமர் மோடி பிறந்தநாள் சமூகநீதி நாள் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

  தமிழக ஆளுநராக  பன்வாரிலால் புரோகித் சிறப்பாக செயல்பட்டார் . முன்னாள் போலீஸ் அதிகாரி 1976 ஆண்டு IPS அதிகாரி மற்றும் உளவுதுறையில் பணிபுரிந்தவர் புதிய ஆளுநரை தமிழக முதல்வர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளார்.திருடனுக்கு தேள் கேட்டியது போல் ஆளுநர் மாற்றத்திற்கு  காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். ஏன் என்று  தெரியவில்லை. ஒரு வேலை இவர் ஏதேனும் கல்லூரியில் ஊழல் செய்திருப்பாரோ. ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது  என்று கூறினார்.

  செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Congress, Ganesh Chaturti, H.raja bjp, K.S.Alagiri, Politics, Tamilnadu, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி