• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பழிக்குப் பழி.. பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை!!

பழிக்குப் பழி.. பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை!!

Youtube Video

சிவகங்கையில் பாஜக மீனவர் அணி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் மறுநாளே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்க்கப்பட்டது எப்படி? 

  • Share this:
    சிவகங்கை மாவட்ட பாஜக மீனவர் அணித் தலைவரான முத்துப்பாண்டியை டீ கடையில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது கொலை வெறி கும்பல் ஒன்று, வீடு தேடி சென்று தேடி பிடித்து கொலை அரங்கேற்ற காரணம் என்ன?

    சிவகங்கை மாவட்டம் வைரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் சிவகங்கை நெல்மண்டித் தெருவில் வசித்து வந்தார். அண்மையில் தான் இவருக்கு சிவகங்கை பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வியாழக்கிழமை அவரைதேடி அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் ஒன்று வந்துள்ளது. அவர் வீட்டில் இல்லை என்பதை அறிந்ததும், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வற்றை சரமாரியாக அடித்து நொறுக்கினர். .

    பின்னர் அவரை தேடி சென்ற கும்பலுக்கு, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள டீக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது, கொலைவெறியில் இருந்த கும்பல் முத்துப்பாண்டியைத் தேடி மதுரை சாலையில் அமைந்துள்ள முக்கு டீக்கடை பகுதிக்கு சென்றது.

    அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை சுற்றி வளைத்த கும்பல் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அப்போது முத்துப்பாண்டி சுதாரித்துக் கொண்டு தப்பி ஓட முயற்சித்தார். ஆனாலும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது.

    Also read: பெண் மருத்துவர் உயிரிழந்த விவகாரம்: பொதுமக்கள் தொடர் போராட்டத்தால், பாதையை நிரந்தரமாக மூட முடிவு

    முத்துப்பாண்டி ரத்த வெள்ளத்தில் சரிந்ததும் கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தலைமறைவானது. அருகில் இருந்தவர்கள் மயக்கத்தில் இருந்த முத்துப்பாண்டியை மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தார்.

    இதனால் முத்துப்பாண்டியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தனிப்படை அமைத்த போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர் நிலையில், கொலையில் தொடர்புடையதாக வைரவன்பட்டியைச் சேர்ந்த 27 வயதான சுகுமார், 22 வயதான பால்பாண்டி, 40 வயதான செல்வேந்திரன் ஆகிய மூன்றுப் பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    2012 ஆம் ஆண்டு கொலை வழக்கில் தொடர்புடைய செல்வம் என்பவரை முத்துப்பாண்டி வெட்டிக்கொலை செய்த வழக்கு உட்பட மூன்று கொலை வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. செல்வத்தின் கொலைக்கு பழித்தீர்க்கவே அவரது உறவினர்களான மூவரும் முத்துப்பாண்டியை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து, சுகுமார், பால்பாண்டி,செல்வேந்திரன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: