Home /News /tamil-nadu /

நகராட்சிக்கு நிதி நெருக்கடி.. பாஜக கவுன்சிலர் செய்த செயலை பாருங்க...!

நகராட்சிக்கு நிதி நெருக்கடி.. பாஜக கவுன்சிலர் செய்த செயலை பாருங்க...!

பாஜக கவுன்சிலர்

பாஜக கவுன்சிலர்

Svaganga | சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் இரண்டாவது சிறப்பு கூட்டம் நகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

  • News18
  • Last Updated :
மானாமதுரை நகராட்சியில் நிதி பற்றாகுறையை சரி செய்ய தனக்கு கொடுக்கப்பட்ட  கவுன்சிலர் படியை 600 ரூபாயையும் தனது சொந்த நிதி 600 ரூபாயையும் சேர்த்து நகராட்சி பொது நிதிக்கு ஒப்படைத்த பாஜக கவுன்சிலர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் இரண்டாவது சிறப்பு கூட்டம் நகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உட்பட திமுக, அதிமுக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சொத்துவரி உயர்வு சம்பந்தமாக நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் சொத்து வரி உயர்வை கண்டித்து சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் நகர் மன்ற  கூட்டத்தின் பாதியிலேயே  வெளிநடப்பு செய்தனர்.

Also read... ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்.. வழக்கறிஞருக்கு சிறை தண்டணை

மேலும் மானாமதுரை நகராட்சி 10 வது வார்டு கவுன்சிலர் பாஜக கட்சியை சேர்ந்த முனியசாமி, நகர் மன்ற கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும், நகர்மன்ற தனது கூட்ட படி 600 ரூபாயோடு சேர்த்து கூடுதலாக 600 ரூபாய் வைத்து, நகராட்சியில் நிதிப் பற்றாக் குறையாக இருப்பதாக கூறி மொத்தமாக 1200 ரூபாயை  மானாமதுரை நகராட்சி பொது நிதிக்கு திருப்பி அளித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, Sivagangai

அடுத்த செய்தி