சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியையிடம், திங்கட்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் மர்ம நபர், 6 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பினார். புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செயின்பறித்தவர், யமஹா KDM பைக்கில் வந்தது பதிவாகியிருந்தது. ரேஸ் பைக் விற்பனை செய்த டீலரிடம் போலீசார் விசாரித்தில் கடந்த மாதத்தில் ஒரே ஒரு பைக் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
குன்றக்குடி அருகே உள்ள கொரட்டி கிராமம் புதுவளவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகன் 25 வயதான கலைதாஸ் என்பவர் தான் அந்த புதிய பைக்கை வாங்கியவர் என்பதும் தெரியவந்தது போலீசார் நேரடியாக அவரது வீ்ட்டிற்கே சென்று கலைதாஸை கைது செய்தனர்.
வீட்டில் மறைத்து வைத்திருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் செயின் பறிப்பிற்குப் பயன்படுத்திய உயர் ரக பைக் உள்ளிட்ட 2 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கலைதாசுக்கு ரேஸ் பைக் மீது அதீத மோகம் இருந்துள்ளது. அதனால் 3,14,000 ரூபாய் மதிப்புள்ள புதிய KDM பைக் வாங்க திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க... கோவையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ1.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்... 2 பேர் கைது
தனது பழைய பைக்கை விற்று ஒரு லட்சம் ரூபாய் ஆரம்பத் தவணை கட்டி கடந்த மாதம் புதிய பைக்கை வாங்கியுள்ளார். ஊரடங்கால் வருமானத்தை இழந்ததால், அவரால் அடுத்தடுத்த தவணை செலுத்த இயலாததால், யூடியூப்பில் வீடியோ பார்த்து செயின்பறிப்பில் ஈடுபட முடிவு செய்தார். ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்டு சிக்காததால் செயின்பறிப்பில் ஈடுபட்டாலும் சிக்காமல் தப்பி விடலாம் என திட்டமிட்டுள்ளார்.
அதனால் ஆள்நடமாட்டமில்லாத இடமாகத் தேர்வு செய்து பள்ளி ஆசிரியையிடம் செயினைப் பறித்துள்ளார். ஆனால் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியை அவர் கவனிக்காமல் விட்டதால் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கலைதாசைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசைப்பட்டு வாங்கிய ரேஸ் பைக்கிற்கு EMI கட்டமுடியாமல், வாழ்க்கையை இழந்து, குற்றவாளியாக மாறி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் கலைதாஸ்.. ஆசை இருந்தாலும், கடனை அடைக்க நடைமுறை சாத்தியம் இல்லாத வகையில் அதிகளவு கடன் வாங்கினால் என்ன ஆகும் என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம்..
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike race, Chain Snatching, Crime | குற்றச் செய்திகள், Karaikudi