சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை நகராட்சியில் பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், நகராட்சி உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைத்தனர்.
சிவகங்கை நகராட்சி 4வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் சேதுநாச்சியார் வீரகாளை, 19 வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பாக்கியலெட்சுமி விஜயகுமார் மற்றும் 22வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் C.L.சரவணன் ஆகிய 3 பேரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் முன்னிலையில் திமுக-வில் இணைத்தனர்.

அமைச்சர் காலில் விழுந்து ஆசி பெற்ற கவுன்சிலர்
மேலும் சிவகங்கை நகராட்சி உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Also read: சிவகங்கை மாவட்டத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - முழுமையான தகவல்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் 9 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் இந்த வெற்றி என்றும், தொடர்ந்து ஐந்தாவது முறையாக திமுக கூட்டணியை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.