• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

பதவி பறிக்கப்பட்ட பாண்டி வேலுவிடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் வாக்குவாதம் செய்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலுவின் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிகுறிச்சி கிராமத்தில் கடந்த 11ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

    கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பற்றியும், பழைய நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிக்கச் சொல்லி ப.சிதம்பரத்துடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு வாக்குவாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார்.

    மேலும், பதவி பறிக்கப்பட்ட பாண்டி வேலுவிடம் விளக்கம் கேட்டும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: