முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது - கருணாஸ் விமர்சனம்

சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது - கருணாஸ் விமர்சனம்

கருணாஸ்

கருணாஸ்

மருது சகோதரர்களின் 220- வது குருபூஜையை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் கருணாஸ் அஞ்சலி செலுத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது என்று பேசி புராணம் பாடும் மன்றமாகவே சட்டமன்றம் செயல்படுகிறது என முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220- வது குருபூஜையை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ்  அஞ்சலி செலுத்தினார்.விடுதலைபோரில் வெள்ளையர்களை ஏதிர்த்து இன்னுயிர் நீர்த்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழா காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் சமூதாய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரான நடிகர் கருனாஸும் அவர்களது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “சமூக நீதி கட்சி என தெரிவித்துக்கொள்ளும் திமுக அரசு சமூக நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முந்தைய அரசு ஒரு சாரருக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்தது அதனை மாற்றி அனைத்து சமூகத்திற்குமான அரசாக செயல்பட வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது திமுக ஆட்சி அமைந்தால் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் ஐயாவின் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தார் அதனை செயல்படுத்த வேண்டும்.

மேலும் சசிகலா பயனம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், சிறைச்சாலையில் இருந்து வரும்போதே அரசியல் பயணத்தை துவங்கிவிட்டார். அவர்களை பற்றி விமர்சனம் செய்ய விருப்பமில்லை. திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அது குறித்து விமர்சனம் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக அதிமுகவின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு சட்டமன்றம் ஒரு வெட்டிமன்றமாக செயல்படுகிறது. மக்கள் வரிபணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தங்களது என்று பேசி புராணம் பாடும் மன்றமாகவே செயல்படுகிறது” எனக் கூறினார்.

First published:

Tags: Actor karunas, ADMK, DMK, Karunas, Sasikala, TamilNadu Politics